நேற்று இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றதோடு தொடரையும் பரிதாபமாய் இருந்தது.
தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கு பயிற்சியாய் இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது. நேற்று இரண்டாவது டி20 போட்டிகள் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது செய்தது.
இலங்கை ரன் குவிப்பு
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 22 பந்தில் 34 ரன்கள், கமில் மிஸ்ரா 30 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்கள். குசால் மெண்டிஸ் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் மூன்று விக்கெட்டுகளில் இருந்து கணிசமான ரன் வந்தது.
இதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் பவன் ரத்னாயக 22 பந்தில் 40 ரன்கள், சரித் அசலங்கா 22 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து 20 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் ஆர்ச்சர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அதிரடி
இதைத்தொடர்ந்து மழை வந்த காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு 17 ஓவரில் 168 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் 29 பந்தில் 39 ரன்கள், டாம் பான்டன் 33 பந்தில் 54 ரன்கள், ஹாரி ப்ரூக் 12 பந்தில் 36 ரன்கள், சாம் கரன் 14 பந்தில் 20 ரன் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : ஒரு கேப்டனையே தூக்குற அளவுக்கு தைரியம் இருக்கு.. தேர்வுக் குழுவை இதற்கு நான் பாராட்டியே ஆகணும் – இர்பான் பதான்
இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் முதல் போட்டியை வென்றிருந்த காரணத்தினால் டி20 தொடரையும் வென்றது. இதற்கு முன்பாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.






