உலக கிரிக்கெட்

இந்திய பிளேயர்ஸ்க்கும் அந்த ஆசை இருக்கு.. ஆனா பிசிசிஐ இதுக்கு கண்டிப்பா ஒத்துக்காது – பாக் முகமது அமீர் வேதனை

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்திய அணியைத் தவிர மற்ற அனைத்து முன்னணி அணிகளும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு தயாராக இருக்கின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் இந்திய அணி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

கலந்து கொள்வதில் சிக்கல்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. ஆனால் அதற்குப் பிறகு சில பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை இந்திய அணி முற்றிலுமாக தவிர்த்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் இந்தியாவில் கலந்து கொண்டு அவ்வப்போது விளையாடி வந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் கலந்து கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று அறிவித்த நிலையில் இந்திய நிர்வாகம் அதனை மறுத்தது.

மேலும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடுவது ரசித்திருப்பார்கள் எனவும் பிசிசிஐயின் கட்டுப்பாட்டால் அது தற்போது நடைபெறாமல் போவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்றால் என் எதிர்காலத்தில் கிரிக்கெட்டுக்கு அது நல்லதாக இருக்காது எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது நல்ல விஷயம் அல்ல

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இரண்டு வெளிநாட்டு தொடர்களையும் வென்றதால் எனக்கு இப்போது அதிக நம்பிக்கை உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக ஒரு நாள் தொடரை வென்றது மிகப் பெரிய சாதனை என்று நினைக்கிறேன். இது முழு பாகிஸ்தான் நாட்டிற்கும் ஒரு பெரிய விஷயமாகும். இவ்வளவு பெரிய நிகழ்வு நடக்கிறது மேலும் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கு வருகின்றன. இது ஒரு பெரிய திருவிழாவாக இருக்கப்போகிறது.

இதையும் படிங்க:அந்த ஒரு விஷயம் நடந்தா.. என்னை யாருன்னு பாப்ப.. ஃபார்ம் அவுட் பத்தி ரோஹித் இதுதான் சொன்னார் – சர்துல் பேட்டி

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என உண்மையிலேயே விரும்பினேன். ஒரு வீரராக இந்தியா பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கும் வரவேண்டும் என விரும்புகிறேன். கிரிக்கெட்டில் எல்லைகள் இல்லை, எல்லைகள் நிர்ணயிக்கப்படுவதை நான் எப்போதும் எதிர்க்கிறேன். இந்திய அணி பாகிஸ்தான் வரும் போது இந்தியாவும் அதை ரசித்திருக்கும் இந்திய வீரர்களும் அதை ரசித்திருப்பார்கள். ஆனால் இறுதியில் சில கட்டுப்பாடுகளினால் அது நடைபெறாமல் போனது. இது நல்ல விஷயம் அல்ல எதிர்காலத்தில் இந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வரும் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by