கோலி 10 வருஷமா இத செய்றாரு.. அவர இவங்களோட கம்பேர் பண்ணா சிரிப்புதான் வருது – பாக் முகமது அமீர் கருத்து

0
90

இந்திய அணி கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாக திகழும் விராட் கோலி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் சிறந்த வீரர் விராட் கோலி

உலக கிரிக்கெட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படும் இந்தியாவின் விராட் கோலி, பாகிஸ்தானின் பாபர் அசாம், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் திகழ்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்கள் விளையாடும் நாடுகளைத் தாண்டி உலக நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருமே தங்களது அணியை வெற்றி பெற வைப்பதில் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய மகத்தான வீரர்கள் ஆவார்கள்.

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் விராட் கோலி அனைத்து வடிவங்களிலும் சிறந்த வீரராக திகழ்ந்த நிலையில் சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துவிட்டு டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகமது ஆமீர் விராட் கோலி இந்த தலைமுறையின் சிறந்த வீரர் எனவும் அந்த மூன்று வீரர்களைக் காட்டிலும் இவர் தனித்து நிற்கிறார் என அதற்கான காரணத்தை விளக்கி கூறுகிறார்.

- Advertisement -

எனக்கு சிரிப்பு தான் வருகிறது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி இந்த தலைமுறையின் மிகச் சிறந்த வீரர் அவரை ஸ்மித், ஜோ ரூட், பாபர் அசாம் ஆகியோருடன் ஒப்பிடும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. விராட் கோலியை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அணிக்காக பல போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். விராட் கோலி ஒரு வடிவத்தில் மட்டுமல்ல, மூன்று வடிவத்திலும் ஒரு தலைமுறை சாம்பியன் வீரராக இருக்கிறார். விராட் கோலியின் பணி ஒழுக்கம் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கச் செய்கிறது.

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி 2025.. இங்கி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நீக்கம்.. ஆச்சரியம் அளித்த கிரிக்கெட் வாரியம்.. முழு விவரம்

2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான நிலைக்குப் பிறகு அவர் மீண்டும் திரும்பி கடந்த 10 வருடங்களாக சிறப்பாக செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் அந்த இறுதிப் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து இருப்போம். அது எங்களுக்கு மிக முக்கியமான போட்டியாக இருந்தது விராட் கோலியின் சாதனை ரன்கள் துரத்துவது தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -