சாம்பியன்ஸ் டிராபி 2025.. இங்கி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நீக்கம்.. ஆச்சரியம் அளித்த கிரிக்கெட் வாரியம்.. முழு விவரம்

0
705

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியை அறிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சேர்க்கப்படாத குறித்து அதற்கான காரணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி 2025

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் அதில் கலந்து கொள்ள உள்ள இறுதி அணியை தேர்வு செய்து வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அந்தத் தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு ஜாஸ் பட்லர் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். காயம் காரணமாக முக்கிய ஐசிசி நிகழ்வுகளில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்தத் தொடரில் இடம் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் ஐசிசி நிகழ்வுகளில் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பென் ஸ்டோக்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கு பெறவில்லை. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது குறித்து தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரிவான விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது ஸ்டோக்ஸ் இடது தொடையில் காயம் அடைந்திருக்கிறார். இதனால் அந்தத் தொடரில் பாதியிலேயே அவர் வெளியேறி இருப்பதால் அவரது காயம் கருதி இங்கிலாந்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் நீக்கம்

அது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறும்போது ” தர்ஹாம் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இடது தொடை தசையில் காயம் அடைந்தார். இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. அவரது சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால் அவர் இந்தத் தொடரில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து அணி ஐசிசி கோப்பையை வெல்லும் போதெல்லாம் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேற வழியே இல்ல.. இந்திய அணி ஜெயிக்க.. ரோகித் இந்த முடிவு எடுக்கணும் – ரவி சாஸ்திரி பேட்டி

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோயிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வூட்

- Advertisement -