புயல் மாதிரி.. இந்த இந்திய வீரருக்கு மட்டும் நான் உத்தரவாதம் தர மாட்டேன் – பிசிசிஐ ஜெய் ஷா கருத்து

0
453
Jay

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டு பல விஷயங்களில் இருந்த சந்தேகம் குறித்து தீர்த்து வைத்தார். இந்த வகையில் மிகவும் முக்கியமான ஒரு இந்திய வீரர் குறித்தான கேள்விக்கு வெளிப்படையாகப் பதில் அளித்திருக்கிறார்.

இந்திய அணி அடுத்த மாதம் முதல் உள்நாட்டில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. உள்நாட்டில் விளையாடுகின்ற காரணத்தினால் இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி ஏறக்குறைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்தை நெருங்கிவிடும்.

- Advertisement -

மேலும் அதற்கடுத்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடுகிறது. உலகம் முழுக்க இருக்கும் பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த டெஸ்ட் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டில் ஹாட்ரிக் டெஸ்ட் வெற்றி பெறுமா என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தொடருக்கு இந்திய அணியின் தரப்பில் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு கூட்டி செல்லப்படுவாரா? என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியிருக்கிறது.

- Advertisement -

காரணம், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் நல்ல பவுன்ஸ் கொண்ட வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளாக இருக்கும். மயங்க் யாதவ் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதோடு, சரியான கட்டுப்பாட்டையும் கொண்டு இருக்கிறார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் மிகவும் சிறப்பான முறையில் இருப்பார். இந்திய அணிக்கு பெரிய துருப்புச் சீட்டாகவும் அமைவார்.

இதையும் படிங்க : அஸ்வின் இல்லை.. ஆல் டைம் இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவன்.. பாகிஸ்தான் பசித் அலி தேர்வு

தற்போது அவர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜெய் ஷா கூறும் பொழுது ” இந்திய அணியில் மயங்க் யாதவ் இருப்பாரா? இருக்க மாட்டாரா? என்பதற்கு என்னிடம் எந்த உத்தரவாதமும் கிடையாது. இதனால் இதுகுறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் காயத்தில் இருந்த அவர் தற்பொழுது தேசிய கிரிக்கெட் அகாடமி பராமரிப்பில் இருந்து வருகிறார். எனவே அவர்கள் கொடுக்கும் அறிக்கைப்படி தான் நமக்கு எல்லாம் தெரியவரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -