நானே ஐடியா தரேன்.. பாகிஸ்தான் கூட இந்தியா இந்த தப்பை மட்டும் செய்யாதிங்க – பாக் கம்ரன் அக்மல் பேட்டி

0
43
Akmal

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு அமெரிக்கா நியூயார்க் நாசாவ் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையில் பேட்டிங் வரிசையில் ஒரு தவறு செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 96 ரன்களில் சுருட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மட்டும் இல்லாமல் பந்துவீச்சு வரிசையும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் பாகிஸ்தான அணி தனது முதல் ஆட்டத்தில் மிகச் சிறிய அணியான அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. மிகச் சிறந்த பந்து வீச்சு தாக்குதலை வைத்திருந்த போதும் அவர்களால் அனுபவம் இல்லாத அமெரிக்க பேட்டிங் யூனிட்டை எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் இந்திய அணி பேட்டிங் வரிசையில் செய்யக்கூடிய ஒரு சிறிய தவறை திருத்திக் கொண்டால் அவர்களுக்கு அது பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து கம்ரன் அக்மல் கூறும் பொழுது “இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை என்று நினைக்கிறேன். விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதை சரியாக இருக்கும். அவர் பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் இருந்து அழுத்தத்தை எடுத்துக் கொண்டு சென்று போட்டியை முடிக்க வசதியாக இருக்கும். ஒருவேளை விராட் கோலி துவக்கத்தில் வருகின்ற காரணத்தினால் அவர் ரன்களுக்கு சென்று விக்கெட்டை இழந்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராக வரவேண்டும். இந்த இடத்தில் இந்திய அணி தவறு செய்வதாக நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிரா ஆடுவது உணர்ச்சி வசமாக இருக்கும்.. சூரியகுமாரை அப்பவே தெரியும் – அமெரிக்க நெட்ரவால்கர் பேச்சு

தற்பொழுது பந்து வீச்சில் நம்பிக்கையாக இருக்கும் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவும் விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் இந்திய அணி ஒரே மைதானத்தில் மூன்று போட்டிகளை விளையாடுவதும் அவர்களுக்கு சாதகமாக அமையும். டி20 உலகக்கோப்பைக்கு நல்ல ஆடுகளங்களை ஐசிசி அமைக்க வேண்டும். இல்லையென்றால் உலகக் கோப்பை தொடரை பார்ப்பதிலிருந்து ரசிகர்கள் விலகி விடுவார்கள்” எனக்கூறி இருக்கிறார்.

- Advertisement -