தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேன் ஆகவும் தடுமாறி வருவது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஹர்பஜன் சிங் பாபர் அசாம் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் இது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தற்போது போதாத காலம் போல இருக்கிறது. ஒரு நாள் உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்து வெளியேறிய பாகிஸ்தான் அணி, அப்போது அணியின் கேப்டனாக பாபர் அசாம் தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில் திரும்பவும் டி20 உலக கோப்பைக்கு அவரையே கேப்டனாக அணியை வழிநடத்தும் படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தது.
இருப்பினும் டி20 தொடரிலும் பாகிஸ்தான் அணி பெரிய தோல்விகளை சந்தித்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்ஷிப்பும், பேட்டிங்கும் முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஹர்பஜன்சிங்கிடம் முதலில் பிரைன் லாரா மற்றும் குமார் சங்கக்கரா ஆகியோரில் சிறந்த பிளேயரை தேர்வு செய்யும்படி கேட்டதற்கு ஹர்பஜன் லாராவை தேர்வு செய்தார். பின்னர் லாரா மற்றும் பாபர் அசாம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யும் படி கேட்டதற்கு லாராவிற்கு பக்கத்தில் பாபரின் பெயரை பார்த்த ஹர்பஜன் அவரது சமீபத்திய பார்மை நினைவில் வைத்து பாபரை கிண்டல் செய்யும்படி நகைச்சுவையாக சிரித்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அகமல் அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
இது குறித்து கம்ரான் அக்பர் கூறும் பொழுது “தற்போது எங்கள் உரையாடல் பாபர் அசாம் பற்றியது. பாபர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாபர் பாகிஸ்தான் அணிக்காக நிறைய சதங்கள் அடித்திருக்கிறார். பிரைன் லாரா மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் ஒப்பீடு எந்த வகையிலும் பொருந்தாது. முந்தைய கிரிக்கெட்டுக்கும், நவீன கிரிக்கெட்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. கிரிக்கெட் வீரர்களாகிய நாமே பொழுதுபோக்கிற்காக அது போன்ற ஒப்பீடுகளை செய்யக்கூடாது. அது போன்ற ஒப்பீடுகளை தானும் செய்திருக்கக் கூடாது என்று ஹர்பஜன்சிங்கும் உணர்ந்திருக்கிறார்” என்று கம்ரான் அக்மல் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஐபிஎல் நடக்கும் போது இந்த மாதிரி வேலையை யாரும் பண்ணாதீங்க.. அது பிளேயர்ஸ்க்கு தான் பிரச்சினை- கம்மின்ஸ் பேட்டி
அதாவது ஹர்பஜன் சிங் இந்த ஒப்பீடு குறித்து சிரித்ததற்காக வருத்தமடைந்ததாக கம்ரான் அக்மல் கூறியிருக்கிறார். மேலும் இதனை சமூக வலைதளங்களில் பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார்.