இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா செய்ய வேண்டிய மாற்றம் குறித்து பாகிஸ்தான் முன்னால் வீரர் டேனிஷ் கனேரியா பேசியிருக்கிறார்.
இந்த மாதம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த காரணத்தினால் தற்பொழுது தன்னம்பிக்கை அளவில் இந்திய அணி மிகவும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. மேலும் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது.
பேட்டிங் வரிசையில் செய்ய வேண்டிய மாற்றம்
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா இந்திய டாப் ஆர்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியதன் அவசியம் மற்றும் பேட்டிங் வரிசையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
இது குறித்து டேனிஷ் கனேரியா பேசும் பொழுது “ரோகித் சர்மா தற்பொழுது துவக்க இடத்தில் இன்றும் வசதியாக இருக்கிறாரா? இல்லை அவரை ஒரு இடம் கீழே இறக்கி மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டுமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அவர் தற்போது இந்திய விக்கெட்டுகளில் போராடி வருகிறார். சவுதி அவரை இரண்டு முறை வெளியேற்றி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் பந்து அதிகம் நகரும். எனவே இந்திய அணி நிர்வாகம் இது குறித்து யோசிக்க வேண்டும்”
டாப் ஆர்டர்கள் செய்ய வேண்டியது
“இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இருக்க வேண்டும். அடுத்தடுத்த இடங்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட வேண்டும். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கின்ற காரணத்தினால், இந்திய பேட்டிங் வரிசையை பயிற்சியாளர் கம்பீர் நிர்வகிக்க வேண்டும்”
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டி20.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. 6 இளம் வீரர்கள்.. 2026க்கு புதிய திட்டம்
“இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய பேட்ஸ்மேன் கிளிக் செய்ய வேண்டும். குறிப்பாக இந்திய டாப் ஆர்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். இந்த இடத்தில் தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தடுமாறுவது பிரச்சினையாக இருக்கிறது. எனவே இவர்கள் கிளிக் செய்தால் இந்திய அணியும் கிளிக் செய்யும். மேலும் கீழ் வரிசையில் வருகின்ற சர்பராஸ் கான் போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.