இனி இந்த வீரர் தேவைப்பட மாட்டார்.. விராட்டை பார்க்க பரிதாபமாக இருக்கு.. இது தேறாது – ஸ்ரீகாந்த் கருத்து

0
123
Virat

தற்போது இந்திய அணியில் ஒரு வீரர் பழைய உற்சாகத்தில் இல்லை எனவும் விராட் கோலி பார்ப்பதற்கு பரிதாபமாக இருப்பதாகவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்லா வீரர்களும் ஏமாற்ற விராட் கோலி நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா மூவர் மட்டும்தான் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனை

நியூசிலாந்து அணியில் சுழல் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருந்த கேப்டன் பிரேஸ்வெல் மற்றும் லெனாக்ஸ் இருவரும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். மேலும் மூன்றாவது போட்டியில் பிரேஸ்வெல் காயத்தால் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களால் பகுதி நேர பந்துவீச்சாளர்களை கூட எதுவும் செய்ய முடியவில்லை.

அதே சமயத்தில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர ஸ்பின்னர்கள். இவர்களை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வெகு எளிதாக சமாளித்து ரன்கள் எடுத்தார்கள். இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு சுழல் பந்துவீச்சு சிறப்பாக இல்லாதது காரணமாக இருக்கிறது.

- Advertisement -

விராட்டை பார்க்க பரிதாபம்

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும் பொழுது “2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜா யாராலும் கணிக்க முடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டார். அப்பொழுது அவர் காட்டிய உற்சாகம் இப்போது இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எதிரணி பேட்ஸ்மேன் களால் மிகவும் எளிதாக அவர் பந்துவீச்சு தாக்கப்படுகிறது”

இதையும் படிங்க : இந்திய அணி தோத்துடிச்சு தான்.. ஆனா இதுக்காக கம்பீரை பாராட்டியே ஆகணும்.. தைரியமான முடிவு – சடகோபன் ரமேஷ் கருத்து

“விராட் கோலியை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஒரே வீரர் மட்டும் ஆடி இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் எத்தனை போட்டிகளை நம்மால் வெல்ல முடியும். இத்தனைக்கும் நியூசிலாந்தின் பந்துவீச்சு யூனிட் மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால் அவர்களை எதிர்த்து நம்முடைய பேட்ஸ்மேன்களால் எதையும் செய்ய முடியாமல் போனது கவலை அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -