ரோகித் கம்பீருக்கு ஒற்றுமை இல்ல.. இந்திய அணிக்குள் வேற மாதிரி இந்த விஷயம் நடக்குது – பாகிஸ்தான் பசித் அலி பேச்சு

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருவரும் ஒரே பக்கத்தில் ஒற்றுமையாக இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோற்றது. மேலும் மூன்றாவது போட்டியில் தற்பொழுது மோசமான நிலையில் இருந்து வருகிறது.

இருவரிடையே ஒற்றுமை இல்லை

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “ரோகித் சர்மா மற்றும் கம்பீர் இருவரும் ஒரே பக்கத்தில் இல்லை. அது இலங்கையில் ஒருநாள் போட்டி தொடராக இருந்தாலும் சரி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான பலவீனமான டெஸ்ட் தொடராக இருந்தாலும் சரி, அல்லது நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த டெஸ்ட் தொடராக இருந்தாலும் சரி இருவரும் ஒரே பக்கத்தில் இல்லை”

“ரோகித் சர்மா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு இரண்டாவது போட்டிக்கு திரும்பிய பிறகு, அந்தப் போட்டி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கம்பீர் மற்றும் அவருக்கும் இடையில் ஒற்றுமையை பார்க்க முடியவில்லை. ஆனால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே ஒற்றுமையாக செயல்பட்டார்கள்”

- Advertisement -

மூன்று டெஸ்ட் மூன்று ஸ்பின்னர்

“தற்பொழுது மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களை கொண்டு வந்து விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்தார்கள். ஆனால் தற்பொழுது டாஸ் வென்று பந்து வீசுகிறார்கள். ஆஸ்திரேலியா அணியில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரில் ஒருவர் கூட இல்லை. இதுவும் புரியவில்லை”

இதையும் படிங்க : பாகிஸ்தான் கோச் பதவி.. இதனால் தான் நானும் ராஜினாமா செய்தேன்.. என்னால முடியல – ஜேசன் கில்லஸ்பி வருத்தம்

“முதலில் பந்து வீச வேண்டும் என்கின்ற முடிவு வானிலை காரணமாக சரியாக இருக்கலாமா? என்றால் அது சரி கிடையாது.ஏனென்றால் தற்போது இந்திய அணியில் பும்ரா மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக இருக்கிறார். அவருக்கு மற்றபடி சரியான ஒத்துழைப்பு எதுவும் இல்லை. மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் சிக்கல்களை பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கல் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவராலும் தீர்க்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts