இந்தியா கிட்ட இருந்து இத நாங்க கத்துக்கணும்.. இன்னொரு மைக்கேல் பெவன்யா அந்த பையன் – பாக் பசித் அலி பாராட்டு

0
1720
Basit

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்திய அணி நேற்றைய போட்டியில் 41 ரன்னில் தனது டாப் ஆர்டரை இழந்துவிட்டது. இருந்த போதிலும் நிதிஷ்குமார் மற்றும் ரிங்கு சிங் இருவரும் சேர்ந்து 59 பந்தில் 108 ரன் பார்ட்னர்ஷிப் அதிரடியாக அமைத்து இந்திய அணியை 200 ரன்கள் தாண்டச் செய்தார்கள். இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் அணுகுமுறை

இந்திய அணி தொடர்ந்து அடுத்தடுத்து எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இதன் காரணமாக நடுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 தொடரில் இருந்து கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் என ஆறு வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டது.

இந்த நேரத்தில் இந்திய அணிக்கு மூன்று வருடங்களாக விளையாட வருண் சக்கரவர்த்தி, மேலும் அறிமுக வீரர்களாக மயங்க் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோரை கொண்டு வந்தது. மேலும் வந்த வேகத்தில் இவர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கொடுத்து விளையாடவும் வைத்தது. இரண்டு போட்டிகளிலும் இந்த மூன்று வீரர்களுமே மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். மூன்றாவது போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாகலாம்.

- Advertisement -

இந்தியாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி “சிந்தனை செயல்முறை மிகவும் முக்கியமானது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இல்லவே இல்லை. இந்தியா கில் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வு கொடுத்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அப்படி யாருக்கும் ஓய்வே கொடுக்கவில்லை. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் இடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : வெளியில் நின்று பந்து வீசிய ரியான் பராக்.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது.?.. முழு விவரம்

“நிதிஷ் அடிக்கும் சிக்ஸர்களை பார்க்க அபாரமாக இருக்கிறது. பின்னர் ரிங்கு சிங் மைக்கேல் பெவன் போல விளையாடினார். கம்பீர் சிந்தனை முறை வெற்றியடைந்திருக்கிறது. அவர் உடனே உலகக் கோப்பையை இல்லாவிட்டாலும் கூட, தொடர்ந்து ஆதரிக்கும் வீரர்களை ஆதரித்துக் கொண்டே இருப்பார். ஏனென்றால் அவர்கள் வீரர்களை தேர்ந்தெடுத்து உருவாக்குகிறார்கள். இதற்கு அதுவே சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -