இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆனால் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலியா டெஸ்ட் குறித்து பேட்ஸ்மேன்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் மோசமாக தோல்வியை தழுவி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கு தயாராகும் விதமாக இந்தியா ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
மேலும் இந்திய சீனியர் அணியும் வருகிற 10ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்னதாகவே கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரேல் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று அங்கு தங்களது பயிற்சி தொடங்க இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆன சுனில் கவாஸ்கர் இந்தியா பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சை அதிக அளவில் எதிர்கொண்டு பயிற்சி பெறுமாறு சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
பேட்ஸ்மேன்களுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “உங்களை முதலில் நீங்களே நம்புங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு பயிற்சி செய்யுங்கள். வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதில் சில தகுதிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் வழக்கமான பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் அவசியம். வேகமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடுங்கள். ஆனால் அதில் நிச்சயமாக பும்ரா கிடையாது. ஏனெனில் பும்ரா ஒரு மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.
இதையும் படிங்க:நம்ம கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வி.. ஒரே வழி இதை மட்டும் செய்யுங்க – யுவராஜ் சிங் அறிவுரை
ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களை 22 யார்டுகளில் இருந்து 20 யார்டுகளுக்கு பந்து வீசச் சொல்லலாம். இதில் பந்து விரைவாக மட்டையை நோக்கி வரும்போது நீங்கள் அதற்கு நன்றாக பழகி விடுவீர்கள். பேட்ஸ்மேன்களுக்கு குறிப்பாக நான் இதைத்தான் கூறுவேன். ஐந்து நாள் ஆட்டங்களில் பொறுமையாக இருந்து ரன்களை குவிப்பீர்கள். ஆஸ்திரேலியா ஆடுகளங்களை பொறுத்தவரை புதிய பந்து தேய்ந்த பிறகு பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இப்போது எல்லாம் புதிய பந்து 10 முதல் 12 ஓவர்கள் வரை மட்டுமே ஸ்விங் ஆகிறது” என்று கூறி இருக்கிறார்.