சூர்யா கம்பீர் செய்த தவறு.. பிட்ச் பத்தி தெரிஞ்சும் அடுத்த போட்டியில் இந்த மாதிரி பண்ணாதீங்க – பாசித் அலி கருத்து

0
622

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் தவறு செய்திருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா செய்த தவறு

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற போதிலும் பேட்டிங் தேர்வு செய்யாமல் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணி அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 127 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பிறகு அதற்கு பிறகு களம் இறங்கி விளையாடிய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே மூன்று விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து பாசித் அலி விரிவாக கூறும்போது “எதற்காக இந்தியா டாஸ் வென்ற போதிலும் சூரியகுமார் யாதவ் மற்றும் கம்பீர் ஆகியோர் பீல்டிங் தேர்வு செய்தார்கள்? இது ஒரு தட்டையான மேற்பரப்பு கொண்ட 200 ரன்கள் குவிக்கக்கூடிய ஒரு ஆடுகளம். இந்த சூழ்நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். எனவே இரண்டாவது போட்டியில் இதே தவறை செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். பனியில் பந்து வீசுவதன் மூலமாக அவர்களது பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும்.

இது ஒரு கனவு அறிமுகம்

மயங்க் யாதவுக்கு இது ஒரு கனவு அறிமுகமாகும் என்று நினைக்கிறேன். தனது முதல் போட்டியிலேயே மணிக்கு 149.9 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். அவர் காயத்தில் இருந்து திரும்ப வந்துள்ளதால் மணிக்கு 157 அல்லது 158 கிலோமீட்டர் வேகத்தில் அவர் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்த்திக் பாண்டியாவுக்கு பதிலாக அவருக்கு புதிய பந்தை கொடுத்தால் அவர் பயத்தை உண்டாக்க முடியும்.

இதையும் படிங்க:284 ரன்.. அயர்லாந்து கேப்டன் அசத்தல் பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா தோல்வி.. முடிவுக்கு வந்தது தொடர்

நீங்கள் போட்டியை பார்த்தால் பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சில் முன் காலை வைத்து எதிர்கொண்டு விளையாடி இருக்க மாட்டார்கள். அவர் ஆரோக்கியமாக இருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கட்சிகளுக்கு செல்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -