இந்திய அணி நாளை மும்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி 12 வருடங்களுக்கு பிறகு உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பையும் கடினமாக்கி கொண்டிருக்கிறது.
புனே டெஸ்டில் செய்த தவறு
மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்திய அணியில் ஆகாஷ் தீப் இடத்தில் அக்சர் படேல் இடம் பெற்று இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் தேவையில்லாமல் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்தது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடுகளத்தை பார்த்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி சில ஆலோசனைகளை இந்திய அணிக்கு கூறி இருக்கிறார்.
இந்திய அணி இதைச் செய்ய வேண்டும்
இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஆடுகளம் எப்படிப்பட்டதாக இருந்தாலுமே ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மும்பையில் சிவப்பு மண் ஆடுகளம் தயாராக இருக்கிறது. நியூசிலாந்து அணி ஒயிட் வாஸ் செய்யும் என்று மக்கள் பேசுகிறார்கள். ஆனால் அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்காது”
“மேலும் மும்பையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தயார் செய்யப்பட்டு இருந்தால், இந்திய அணி ஒரு வேகப் பந்துவீச்சாளரை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். நியூசிலாந்து அணியில் கான்வே ரவீந்தரா மற்றும் லாதம் மூவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கிரெடிட்டை எடுக்க முடியாது”
இதையும் படிங்க : நாளை மும்பை டெஸ்ட்.. குறிக்கிடும் மழை.. ஆடுகளம் மற்றும் மைதான வரலாற்று புள்ளி விபரங்கள்
“எனவே இந்திய அணி அனைத்து ஹோம் ஒர்க்குகளையும் சரியாக செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு ஒரு வெற்றி முக்கியம். ஒருவேளை இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியா சென்றால் நிறைய சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்”






