இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பையில் இந்திய ஆடக்கூடாதுனு கடவுளை வேண்டுகிறேன்.. வந்தா வேற மாதிரி ஆயிடும் – பாக் பசித் அலி பேட்டி

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க கூடாது என கடவுளை வேண்டிக் கொள்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் யுஏஇல் எட்டு ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கு பெறாமல் இருந்தால் நல்லது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பேசியிருக்கிறார்.

ஏற்கனவே விலகிய இந்திய அணி

சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற லெஜென்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரை இறுதியில் விளையாட வேண்டிய நிலையில் இந்திய அணி மறுத்து தொடரை விட்டு வெளியேறி வந்தது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி விளையாடாமல் புறக்கணிக்க வேண்டும் எனவும், இந்திய அணி ஏன் தொடரை விட்டு வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி நகைச்சுவையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆடக்கூடாது

இதுகுறித்து பசித் அலி பேசும் பொழுது ” உலக சாம்பியன்ஷிப் லெஜென்ஸ் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட மறுத்து இந்திய அணி வெளியேறியது போல ஆசிய கோப்பை தொடரிலும் செய்ய வேண்டும் என நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். ஏனென்றால் நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்திய அணி எங்களை வீழ்த்தி விடும்”

இதையும் படிங்க : சாம்சனை தரோம்.. ஆனா அந்த 3 பேர்ல ஒருத்தர் வேணும்.. அடிமடியில் கை வைத்த ராஜஸ்தான்.. நிராகரித்த சிஎஸ்கே.. முழு விபரம்

“மேலும் நாங்கள் ஆப்கான் அணிக்கு எதிராக வெற்றி பெறுவது மிகவும் சிரமமான காரியம். நாங்கள் ஆப்கான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் அது குறித்து இங்கு யாரும் பெரிதாக பேச மாட்டார்கள். ஆனால் நாங்கள் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் அது பெரிய விஷயமாக பேசுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts