இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதை மறந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதாக பங்களாதேஷ் நினைத்து விட்டதாக பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.
பங்களாதேஷ அணி இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட கஷ்டத்து தொடரில் விளையாட வருவதற்கு முன்பாக, பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் வென்று இருந்தது.
பங்களாதேஷ் கேப்டனின் முந்தைய பேச்சு
இந்த நிலையில் பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்பாக போட்டியை கடைசி நாள் வரையில் எடுத்து செல்வோம் எனவும், கடைசி நாளில் கடைசி செஷனில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும், இரண்டு போட்டிகளையும் வெல்வதற்காக விளையாடுவோம் என்றும் சவாலாக கூறியிருந்தார்.
இதற்கு முன்பாக பசித் அலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மழையால் கூட பங்களாதேஷ் அணியை காப்பாற்ற முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளையும் வென்றது. இதனால் பசித் அலி மிகவும் ஏமாற்றம் அடைந்து இருந்தார்.
பங்களாதேஷ் தப்பு கணக்கு போட்டுவிட்டது
இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “பங்களாதேஷ் இந்தியாவை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தும் என பங்களாதேஷ் கேப்டன் கூறியிருந்தார். ஒருவேளை அவர்கள் மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் மோதுவதாக நினைத்து விட்டார்கள். ஆனால் இந்தியா இரண்டு நாட்களில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி விட்டது. இதுதான் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வித்தியாசம். இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : தோனி டிவியை உடைத்ததாக கிளம்பிய செய்தி.. பதிலுக்கு ஆர்சிபி போட்ட பதிவு.. சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்
“இந்த போட்டியில் முடிவு வந்ததால் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த போட்டி டிராவில் முடிவடைந்து இருந்தால், அவுட் ஃபீல்டை சரியாக உலர வைத்து கொடுக்காத காரணத்தினால், உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும். மழையால் கூட பங்களாதேஷ் அணியை காப்பாற்ற முடியாது என முன்பு சொல்லி இருந்தேன். என் வார்த்தையை பாகிஸ்தான் அணி காப்பாற்றவில்லை. ஆனால் இந்திய அணி காப்பாற்றி விட்டது” என்று கூறியிருக்கிறார்.