பும்ரா தயவுசெய்து.. பாபர் அசாம் பாக் கிரிக்கெட்ல செய்யறத செய்யாதிங்க.. உங்க லெவல் வேற – பசித் அலி வேண்டுகோள்

0
81
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாபர் அசாம் செய்து கொண்டிருக்கும் ஒரு வேலையை செய்யவே கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் பதவியை பற்றிய பேசி இருந்த பும்ரா கபில் தேவ் மற்றும் இம்ரான் கான் ஆகியவரை முன் உதாரணமாக காட்டி, பந்துவீச்சாளர்களால் கேப்டன் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் எனவும், ஆனால் அதை கிரிக்கெட் வாரியங்கள் விரும்புவதில்லை எனவும் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் தான் போய் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று கேட்க மாட்டேன் என்றும், பேட்ஸ்மேன்களுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படுவதை பற்றி தான் புரிந்து கொள்கிறேன் என்றும் அவருடைய பேச்சுக்கு முழு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் கேப்டன் பதவியை விரும்புகிறார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

மேலும் இந்திய அணிக்கு ஏதாவது ஒரு வடிவத்தில் அவர் கேப்டன் ஆக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவுக்கு பிறகு பும்ரா கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த இரண்டையுமே பும்ரா எதிர் பார்த்திருப்பார். ஆனால் கிடைக்காத பொழுது அவருக்கு ஒரு ஏமாற்றம் இருந்திருக்கவே செய்யும்.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “பும்ரா பேசி இருப்பதைப் பற்றி கூற வேண்டும் என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை பாபர் அசாம் துரத்திக் கொண்டிருப்பது போல பும்ரா எப்பொழுதும் செய்யக்கூடாது. அவர் ஒரு உயர்தரமான பந்துவீச்சாளர். எனவே அவர் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

அவர் தன்னுடைய பேச்சில் கபில்தேவ் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் கேப்டன்களாக இருந்து சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பையை வென்றது பற்றி கூறியிருந்தார். ஆனால் அவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களாக மட்டும் இல்லாமல், தங்களை ஒரு ஆல் ரவுண்டராக நிலைநிறுத்தியதால்தான் அதைச் செய்ய முடிந்தது. பந்துவீச்சாளருக்கும் ஆல் ரவுண்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இதையும் படிங்க : என்னய்யா நியாயம் இது.. ஐபிஎல்ல அந்த ஒரு மாற்றத்தை செய்யுங்க.. இல்லனா சலிப்பு ஆயிடும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

மேலும் பும்ரா தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருக்கும் கம்மின்ஸ் பற்றி பேசி இருந்தார். அவர் தற்போது ஒரு நல்ல கேப்டனாக இருக்கிறார். ஆனால் ஒரு நல்ல கேப்டனாக பயிற்சியாளராக வரக்கூடிய பந்துவீச்சாளர்கள் மிகவும் குறைவு. பும்ராவை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக்க வாய்ப்புகள் இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -