தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இந்தியாவின் ஸ்டைலான வீரரை தேர்வு செய்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மாவின் தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிற 22ஆம் தேதி முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க், கம்மின்ஸ், ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோர் முக்கிய பங்களிப்பினை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்தியாவின் ஸ்டைலான வீரராக ரோஹித் சர்மாவை தேர்வு செய்து இருக்கிறார். ரோஹித் சர்மாவின் புத்திசாலித்தனம் மற்றும் அவரது ஷாட் செலக்சனுக்காக அவரை தேர்வு செய்திருப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் ஸ்டைலான வீரர்
இது குறித்து அவர் கூறும் போது “எனக்கு ரோகித் சர்மாவின் வேலை மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அணியின் செட் அப்பில் தந்தையாக திகழ்கிறார். ரோகித் சர்மா எல்லாவற்றிலும் ஸ்டைலான வீரர் என்று நினைக்கிறேன். குறிப்பாக அவர் பவர் பிளேவில் எதிரணிக்கு தடுப்பினை உருவாக்கி சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
இதையும் படிங்க:ஏபிடி கனவு டி20 அணி.. விராட் உள்ளே.. தோனி ரிசர்வ் .. 3 மேட்ச் மட்டுமே ஆடுன இந்திய வீரருக்கு இடம்
கிரிக்கெட் திறமையிலும், உடல் அளவிலும் ரோஹித் சர்மா சிறந்தவராக திகழ்கிறார். ஒரு அணியை கட்டமைக்கும் விதத்தில் ரோகித் சர்மா சிறந்தவராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதேபோல பும்ராவும் அவரது அமைப்பில் சில சிறப்பான வேலைகளை செய்கிறார்”என்று கூறியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது நிச்சயமற்றதாக இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் பதவியை ஏற்று இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






