பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தான் விளையாடிய காலகட்டத்தில் சீனியர் வீரர்கள் தன்னுடைய நல்ல தோற்றத்தை பார்த்து பொறாமைப்பட்டார்கள் என பாகிஸ்தான் முன்னால் வீரர் அகமத் சேஷாத் அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணியில் அகமது சேஷாத் இடம் பெற்றார். அந்த நேரத்தில் இருநாட்டு கிரிக்கெட்டிலும் இவர்கள் இருவரும் மிகப்பெரிய வீரர்களாக வருவார்கள் என கணிக்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய அகமத் ஷேஷாத் பின் நாட்களில் மோசமாக விளையாடி அணியில் தன்னுடைய இடத்தை சீக்கிரத்தில் இழந்து விட்டார்.
தொடரும் அகமது சேஷாத் அதிரடி
அகமது சேஷாத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது தைரியமான கருத்துக்களை கூறி வருகிறார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் மிக மோசமாக இருப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட்டில் சரியான அளவு கவனம் செலுத்தாதுதான் என்று கூறினார்.
மேலும் பாபர் அசாம் கேப்டனாக இருந்த பொழுது அவர் அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் எனவும், அவரை எந்த சூழ்நிலையிலும் விராட் கோலி உடன் ஒப்பிடக் கூடாது எனவும், அவர் பார்ம் மோசமாக இருந்தால் அணியை விட்டு நீக்க வேண்டும் எனவும் ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் தோற்றத்தின் மீது பொறாமை
தற்பொழுது பேசியிருக்கும் அகமத் சேஷாத் கூறும் பொழுது “என்னுடைய நல்ல தோற்றத்தின் காரணமாக நான் பல விளைவுகளை சந்தித்து இருக்கிறேன். பாகிஸ்தான் மக்கள் தோற்றத்தை வைத்து மதிப்பிடும் துறையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இளமையாக இருந்த பொழுது எங்களுக்கு இது குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. அந்த நேரத்தில் நாங்கள் பாகிஸ்தான் அண்டர் 19, பாகிஸ்தான் ஏ அணி மற்றும் பாகிஸ்தான் சீனியர் அணிக்காக அட்டகாசமாக விளையாடி வந்தோம்”
இதையும் படிங்க : 72 வருடம்.. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நோமன் அலி புதிய வரலாறு.. வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவு
“எங்களின் சில மூத்த வீரர்கள் நான் அழகாய் இருப்பதற்காக என்னை பார்த்து பொறாமைப்பட்டார்கள். நீங்கள் கொஞ்சம் அழகாக இருந்தாலோ, என்ன ஆடை அணிய வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பது குறித்து உங்களுக்கு தெரிந்திருந்தாலோ, உங்களுக்கும் உங்கள் சீனியர் வீரர்களுக்கும் இடையே வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதனால்தான் நான் இப்பொழுது இது குறித்து கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.