ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்று முன்னேறுவது சந்தேகத்துக்கு இடமாக இருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் பாபர் அசாம் மீது கடுமையான விமர்சனங்கள் பாகிஸ்தானில் இருந்து கிளம்பி இருக்கிறது. இந்த வகையில் பாகிஸ்தான் முன்னால் வீரர் அகமத் சேஷாத் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
தற்பொழுது பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், தங்களுடைய கடைசிப் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். அதேபோல் அமெரிக்க அணி அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைய வேண்டும். இந்த இரண்டும் நடக்கும் பொழுது பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியை விட ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் ப்ளோரிடா மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அங்கு மழை அதிகமாக பெய்து வருகின்ற காரணத்தினால் பாகிஸ்தான அணியின் இரண்டாவது சுற்றுக்கு ஆபத்து உருவாகி இருக்கிறது. ஏற்கனவே அங்கு இலங்கை மற்றும் நேபாளள் அணிகள் மோத இருந்த போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பாபர் அசாம் குறித்து விமர்சனம் செய்திருக்கும் அகமத் சேஷாத் “பாபர் அசாம் ஐசிசி டி20 நிகழ்வுகளில் உங்களுடைய ஸ்டிரைக் ரேட் 112. உங்களுடையரன் ஆவரேஜ் 26. இதுவரையில் நீங்கள் பவர் பிளேவில் மட்டும் டி20 உலக கோப்பை தொடர்களில் 207 பந்துகள் சந்தித்து இருக்கிறீர்கள். ஆனால் ஒரு சிக்சர் கூட நீங்கள் அடிக்கவில்லை.
எட்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய புள்ளி விபரங்கள் கூட உங்களை விட சிறந்ததாக இருக்கும். நீங்கள் ஒரு பேக் கிங். உண்மையான கிங் கிடையாது. பாகிஸ்தான் போட்டிகளை வெல்வதற்காக விளையாடுகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் புள்ளி விபரங்களால் சமூக ஊடகங்களில் ரசிகர்களை முட்டாள் ஆக்குகிறீர்கள்.
இதையும் படிங்க : எல்லா பொசிஷனுக்கும் அந்த வீரர் சரியா இருப்பாரு.. கோலியை 3ம் இடத்துக்கே அனுப்புங்க.. முகமது கைப் கருத்து
நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் கைகளை உயர்த்தி ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்தது. நான் எனக்கு தேவையான வீரர்களை கேட்டு வாங்கினேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை’ என்று மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் உங்கள் திறமையை மீட்க நீங்கள் இப்பொழுது உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதற்கு திரும்ப வேண்டும்” என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.






