இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட்டை விட சிறந்தவர்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்களை பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் தேர்வு செய்திருக்கிறார்.
தற்போது உலக கிரிக்கெட்டில் பும்ரா தலைசிறந்த வீரர்களின் பட்டியலில் விளையாடும் பொழுது சேர்ந்திருக்கும் வீரராக மாறியிருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தற்போது அவருக்கு இணையான ஒரு வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்பது உண்மை. இந்த நிலையில் அகமத் சேஷாத் பம்ராவை தாண்டி ஒரு பந்துவீச்சாளரை தேர்வு செய்து இருக்கிறார்.
அகமத் சேஷாத் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாசிம் அக்ரம் உடன் இணைத்து பல பந்துவீச்சாளர்களின் பெயர்கள் யார் சிறந்தவர் என கேட்கப்பட்டது. இதில் வக்கார் யூனுஸ், ஷேன் பாண்ட், மிட்சல் ஜான்சன் என எல்லோரையும் தள்ளி அவர் வாசிம் அக்ரமை சிறந்தவர் என தேர்ந்தெடுத்தார். பும்ரா பெயரை கொடுத்த பொழுதும் அவர் வாசிம் அக்ரமையே தேர்ந்தெடுத்தார்.
இதுகுறித்து அகமத் சேஷாத் கூறும் பொழுது ” இது மிகவும் எளிதான கேள்வி. நீங்கள் கொடுத்த எல்லா பெயர்களையும் விட வாசிம் அக்ரம் தான் சிறந்தவர். அதே சமயத்தில் தற்போதைய கிரிக்கெட்டில் பும்ரா சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தனது அணிக்காக பெரியவற்றைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் யார் சிறந்த விக்கெட் கீப்பர்? என்ற கேள்விக்கு அவர் ரஷீத் லத்தீப்பை ஒரு கீப்பராக சிறந்தவர் என்று தேர்ந்தெடுத்தார். பிறகு இந்த பட்டியலில் குமார் சங்கக்கராவையும் அதற்கு அடுத்து வந்த கில்கிறிஸ்டையும் தேர்ந்தெடுத்தார். இந்த நிலையில் இறுதிப் பெயராக தோனி வர தோனியையே அவர் சிறந்த விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார்.
இதையும் படிங்க : அஸ்வினை நியாயமா நடத்தல.. எனக்கு தெரியும்.. வேறு மாநில வீரருக்கு இப்படி நடக்குமா? – பத்ரிநாத் விமர்சனம்
இதுகுறித்து அகமத் சேஷாத் கூறும் பொழுது “தோனிக்கு தனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அந்த பாணியில் அவர் மாஸ்டர் ஆனார். அவர் அதில் மாஸ்டர் ஆனது மட்டும் இல்லாமல், அதை பிரபலமாக்கவும் செய்தார். சிறந்த விக்கெட் கீப்பர் யார்? என்றால் நான் தோனியுடன் தான் செல்வேன் என்று கூறியிருக்கிறார்.