கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கோலி ரோகித் ரிட்டயர்டு ஆகட்டும்.. இந்திய அணி எப்படி அந்த இடத்தில் இருக்கும்னு பார்க்கிறேன்.. பாகிஸ்தான் தன்வீர் அகமது பேச்சு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்துவரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான தன்வீர் அகமது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாத இந்திய அணியின் நிலை குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறிய இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த இரண்டு போட்டிகளிலும் ரோகித் சர்மா வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டு சென்றாலும் அக்சார் பட்டேலை தவிர அல்லாமல் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். எதிர்கால இந்திய அணியாக கருதப்படும் இந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறி வருவது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும், நாங்கள் சிங்கங்களாக இருப்பதால் இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடியது, அதேபோல இந்தியாவிற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தருகிறோம் என்று சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு சவால் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாமல் இந்திய அணி சிறந்த ஒரு நாள் அணியாக இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நாளுக்காக காத்திருங்கள். அதற்குப் பிறகு இந்திய அணி எப்படி ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்று சவால் விடும் வகையில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:இன்னும் 2 சிக்ஸ்.. கெய்லின் இமாலய சாதனையை முறியடிக்க போகும் ரோகித்.. தோனியை விட 101 அதிகம்

இந்த இரண்டு அணிகளுக்கிடையான ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி திரும்பவும் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற வீரர்களும் நிலையான பேட்டிங் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

- Advertisement -
Published by

Recent Posts