பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாமின் பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இது குறித்து பாபர் அசாமின் பேட்டிங் ஃபார்மை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரோடு ஒப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப் சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் சமீப காலமாக தனது பேட்டிங்கில் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குறைந்த ரண்களில் வெளியேறிய பாபர் அசாம், தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் 31 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 11 ரன்களும் மட்டுமே குவித்து வெளியேறி இருக்கிறார்.
முன்னணி வீரர்களே இப்படி வெளியேறும் போது பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது தடுமாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப் சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் அவுட் ஆப் பார்மில் இருந்தால் அதிலிருந்து மீண்டு வர குறைந்த நேரம் ஆகும் எனவும், சேவாக் போன்ற வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள் எனவும் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நமது வீரர்கள் தங்களது நுட்பத்தில் ஏதேனும் ஒரு சிக்கல்கள் இருந்தால் அதிலிருந்து மீண்டு வர மிக கடினமாகிவிடும். சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலவீரர்கள் பேட்டிங் பார்ம் சரிவிலிருந்து மீண்டு வருவதை பார்த்திருக்கிறேன். சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் நல்ல பேட்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் ஃபார்ம் அவுட்டிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுக்க வில்லை.
ஆனால் அதே நேரத்தில் வீரேந்திர சேவாக் போன்ற வீரர்கள் திரும்பவும் பேட்டிங் ஃபார்ம்க்கு வர நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். ஒரு சிறந்த வீரருக்கும், திறமை குறைவான வீரருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பாபர் சரியான திசையில் விளையாடவில்லை. பந்து அவரிடம் இருந்து விலகிச் செல்லும் போது எப்போதுமே சிரமப்படுகிறார்.
இதையும் படிங்க:மயங்க் யாதவ் என்கிட்ட உண்மைய சொல்லிட்டாரு.. விளையாடாத காரணம் இதுதான்.. ஆஸிக்கு போவாரா? – மென்டர் தேவேந்திரா வெளியிட்ட தகவல்
எந்த பந்தை அடிப்பது எந்த பந்தை விடுவது என்று தெளிவான திட்டம் வகுக்கவில்லை. அவரது பேட்டிங்கில் உள்ள முழு பிரச்சனையும் இந்த இடத்தில் தான் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இதன்மூலம் வீரேந்திர சேவாக் சச்சின் டெண்டுல்கரை விட ஒப்பீட்டளவில் குறைந்த திறமை கொண்ட வீரர் என்று கூறியிருக்கிறார்.