தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளை சந்தித்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.
இந்த சூழ்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்
கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2017 ஆம் ஆண்டு ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போது அந்த அணியின் தரம், நிர்வாகம், வீரர்கள் என அனைத்திலும் இந்திய அணிக்கு நிகராக பாகிஸ்தான் அணியும் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நிர்வாக மாற்றம், முன்னணி வீரர்களின் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது அதல பாதாளத்தில் இருக்கிறது.
தாங்கள் நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே கோப்பையை கைப்பற்றாவிட்டாலும் அடுத்த சுற்றுக்காவது முன்னேறி இருந்தால் பாகிஸ்தான் அணி இவ்வளவு பெரிய விமர்சனங்களை சந்திக்காமல் இருந்திருக்கும். ஆனால் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து, மூன்றாவது போட்டி மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களிலேயே அடுத்த சுற்றுக்கு கூட முன்னேறாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த சூழ்நிலையில் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் அணி குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கிரிக்கெட் எப்படி மேம்படும்
இதுகுறித்து அவர் கூறும் போது “நீங்கள் வெற்றி பெற்று நல்ல கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் போது தான் உங்களுக்கான மரியாதை கிடைக்கும். நீங்கள் உங்களுக்காக மட்டுமே விளையாடினால் அது யாருக்கும் மரியாதையாக இருக்காது. அது வீரர்களுக்கும் சரி, பாகிஸ்தானுக்கும் சரி, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சரி யாருக்கும் நற்பெயர் இருக்காது. வங்கதேசம் போன்ற அணிகள் எங்களை ஏன் ஒயிட்வாஸ் செய்கிறார்கள் என்று யாராவது கேட்கிறார்களா? தலைவர் இதைக் கேட்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க:இத்தனை கோடி இழப்பா.? WTC இறுதி போட்டியில் இந்திய அணி இல்லை.. பெரிய தொகையை இழக்கும் ஐசிசி.. முழு விபரம்
குறைந்தபட்சம் ஐசிசி போட்டியில் அரை இறுதிக்காவது முன்னேறுங்கள். ஆரம்ப சுற்றுகளிலேயே நீங்கள் வெளியேறுகிறீர்கள். கிரிக்கெட் எப்படி நடத்தப்படுகிறது என்று பயிற்சியாளர், கேப்டன் என யாரிடமாவது இது குறித்து கேட்கப்படுகிறதா? பொறுப்புக் கூறல் இல்லாத போது கிரிக்கெட் எப்படி மேம்படும்? என்று பேசியிருக்கிறார். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் குறைகளை களைய வேண்டிய நேரம் இது இதற்குத் தகுந்தவாறு நிர்வாகம் திறமையாக செயல்பட வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார்.