சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாபர் அசாம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து சர்வதேச அணிகளும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிற நிலையில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் 15 பேர் கொண்ட இறுதி குழுவை அறிவித்த நிலையில் பாகிஸ்தான் அணி மட்டும் கடைசியாக 15 பேர் கொண்ட குழுவை இறுதியாக அறிவித்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த சைம் அயூப் எதிர்பாராத விதமாக காயம் அடைந்ததால், அவர் சாம்பியன்ஸ் டராஃபி தொடரில் இடம்பெறுவதை தவறவிட்டார். இதனால் சிக்கலில் சிக்கி இருந்த பாகிஸ்தான் அணி இதனை சரிகட்டும் விதமாக அணியில் இருந்து நீண்ட காலம் விலகி இருந்த ஃபகார் ஜமானை திரும்பவும் அணிக்குள் அழைத்தது.
அணியும் சீர்கெட்டு அவரின் நம்பிக்கையும் உடைந்தது
அவரை தொடக்க ஆட்டக்காரராக அறிவித்தது மட்டுமல்லாமல் மிடில் வரிசையில் விளையாடி வந்த பாபர் அசாமை தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று அறிவித்தது. மேலும் பாபரால் தொடக்க இடத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது. பாபர் அசாம் கடைசியாக 2015 ஆம் ஆண்டு தொடக்க இடத்தில் விளையாடியவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் 4 மற்றும் 22 ரன்கள் எடுத்தார். அதற்குப் பிறகு மிடில் வரிசைக்கு மாற்றப்பட்டு அதில் பல சாதனைகள் படைத்து விராட் கோலிக்கு நிகராக பேசப்பட்டார்.
இதையும் படிங்க:304 ரன்.. வில்லியம்சன் கான்வே மாஸ் பேட்டிங்.. முத்தரப்பு தொடர் பைனலில் நியூசி.. தென் ஆப்பிரிக்க அணி தோல்வி
இந்த சூழ்நிலையில் முத்தரப்பு தொடரில் மீண்டும் தொடக்க இடத்தில் களமிறங்கிய பாபர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பது சற்று சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கடந்த பல மாதங்களாகவே பேட்டிங்கில் பாபர் அசாம் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அகமல் ” நீங்கள் பாபர் அசாமை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக மாற்றி இருக்கிறீர்கள். இதனால் அணியின் சேர்க்கையும் சீர்கெட்டு பாபர் அசாமின் நம்பிக்கையும் பாழாகி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






