தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய நியூசிலாந்து அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று மீண்டும் நியூசிலாந்து அணி மோதியது. இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்கிய அறிமுக வீரர்
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்றி கிளாசன் மற்றும் ரபாடா, மார்க்கோ யான்சன், கேசவ் மகராஜ் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அறிமுக வீரரான தொடக்க ஆட்டக்காரர் பிரிட்ஸ்கி அபாரமான முறையில் விளையாடி 148 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 150 ரன்கள் குவித்தார். மிடில் வரிசையில் வியான் முல்டர் 60 பந்தில் 64 ரன்கள், கேப்டன் பவுமா 23 அதில் 20 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓரூர்க் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
வில்லியம்சன் – கான்வே அபார பேட்டிங்
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் வில் யங் 31 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஜோடி சேர்ந்த டெவோன் கான்வே – கேன் வில்லியம்சன் ஜோடி அபாரமான முறையில் விளையாடி இதில் இருவருமே அரை சதம் கடந்தார்கள். சிறப்பாக விளையாடிய கான்வே 107 பந்தில் 97 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். இந்த ஜோடி 155 பந்துகளில் 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை எளிதாக்கியது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் ஆட்டம் இழக்காமல் 113 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும்2 சிக்ஸர்கள் உடன் 133 ரன்கள், கிளன் பிலிப்ஸ் ஆட்டம் இழக்காமல் 32 பந்துகளில் 28 ரன் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 48.4 ஓவரில் இலக்கை எட்டி ஆரம்பிக்க வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க : 3வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள்.. கம்பீர் மாஸ்டர் பிளான்.. முழு அலசல்
நாளை மறுநாள் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.






