ரிஷப் பண்ட்க்கு ஐபிஎல் ஏலத்தில் 50 கோடி கொடுங்க.. இந்த ஒரு காரணம் போதும் – பாகிஸ்தான் பசித் அலி வேண்டுகோள்

0
200
Rishabh

நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டுக்கு 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பாராட்டி பேசி இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணியில் கில்லுக்கு அடுத்து மிகச் சிறப்பான பேட்டிங்கை ரிஷப் பண்ட் வெளிப்படுத்தி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடி அரைசதங்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக ஏமாற்றிய இந்திய பேட்டிங் யூனிட்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கில், ஜெயஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே குறிப்பிடும்படியாக விளையாடி இருந்தார்கள். சர்பராஸ் கான் அதிரடியாக 150 ரன்கள் முதல் டெஸ்டில் எடுத்திருந்த போதும், அவருடைய தற்காப்பு ஆட்டம் மிகவும் பலவீனமாக இருந்தது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் அவர் மலிவான முறையில் விக்கெட் கொடுத்து வெளியேறியிருக்கிறார்.

மேலும் இந்திய பேட்டிங் யூனிட்டில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த இடத்தை விட்டு சென்றிருந்தாரோ தற்பொழுது அதே இடத்தை முன்பை விட மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார். அவருடைய ஷாட் செலக்சன் முன்பை விட மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறது. இதன் காரணமாக பல முன்னாள் வீரர்கள் ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து பாராட்டி பேசி வருகிறார்கள்.

- Advertisement -

50 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 60 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 64 ரன்கள் எடுத்தார். இந்த இளம் வீரரை பற்றி நான் என்ன சொல்வது! ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு 25 கோடி ரூபாய் கொடுக்கலாம் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் என் கருத்துப்படி அவருக்கு 50 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க : அஸ்வின் கோலி மாதிரி அல்ல.. ஆனா இதை செய்யறப்போ அவர வேற மாதிரி பார்க்கலாம் – தினேஷ் கார்த்திக் கருத்து

“அவர் சுழல் பந்துவீச்சுக்கு நன்கு சாதகமான மும்பை ஆடுகளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக தட்டையாக தெரிந்தது. அவர் ஷாட் தேர்வில் மிகவும் கவனமாக புத்திசாலித்தனமாக இருந்தார். அவர் தன்னுடைய பலவீனமான பகுதிகளில் பந்தை அடிக்க நினைக்கவில்லை. மற்றவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. ஆனால் அவர் இதைச் செய்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -