அஸ்வின் கோலி மாதிரி அல்ல.. ஆனா இதை செய்யறப்போ அவர வேற மாதிரி பார்க்கலாம் – தினேஷ் கார்த்திக் கருத்து

0
30

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற போராடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் வீழ்த்திய விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின்

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணி 235 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்த போது இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. மாறாக இரண்டாவது இன்னிங்ஸில் 17 ஓவர்கள் வீசி 63 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் இந்த தொடரில் அவருக்கு பெரிதும் விக்கெட்டுகள் விழாத நிலையில் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எடுத்த மூன்று விக்கெட்டுகளில் தனிப்பட்ட ஆக்ரோசத்தை காண முடிந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். மேலும் ஒரு முன்னணி பந்துவீச்சாளராக அவரது ஈகோ வெளிவருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் விராட் கோலி மாதிரியானவர் அல்ல

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் ஒரு தனித்துவமான உடல் மொழியை பார்த்தேன். நீங்கள் அஸ்வினை நெருக்கமாக பின் தொடர்ந்து கவனித்தீர்கள் என்றால் அவர் விராட் கோலி போன்ற ஆக்ரோஷமான பாவனையை முகத்தில் வெளிப்படுத்துபவர் அல்ல. ஆனால் அவர் சிறப்பாக செயல்பட விரும்புகிறார் என்று தெரிந்தால் ஒரு குறிப்பிட்ட உடல் மொழியை அவரிடம் இருந்து காண முடியும். ஒரு விக்கெட்டை அவர் எடுக்கும் போது அவர் கொண்டாடும் விதத்தில் அதை காண முடியும்.

இந்த தொடரில் நான் முதன்முறையாக உணர்ந்தேன். இல்லை, இல்லை இது போதும் என்று காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது திறமையை காட்ட வேண்டும் மேலும் இன்றும் அவர் தனது சிறந்த நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக அவரது ஈகோ காயப்படுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் நிகழும் போது இம்மாதிரியான கொண்டாட்டம் வெளி வருகிறது” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

- Advertisement -