இந்திய அணிக்கே முன்னுரிமை.. 6 வீரர்களை அள்ளிய முன்னாள் பாக் வீரர்.. சாம்பியன்ஸ் டிராபி பிளேயிங் லெவன்.. முழு விபரம்

0
185

தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பை கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி இந்த தொடருக்கான தனது பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

பசித் அலி தேர்வு செய்துள்ள பிளேயிங் லெவன்

தனது அணியில் 6 இந்திய வீரர்களை மொத்தமாக தூக்கி இருக்கிறார். இவரது அணியில் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இருக்கிறார்கள். இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மாவையே கேப்டனாகவும் நியமித்திருக்கிறார். அதற்கு அடுத்த மூன்று இடங்களில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். மூன்றாவது வரிசையில் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி வருகிறார். விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதற்கு அடுத்த மிடில் வரிசையில் இந்த தொடரில் கலக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4வது வரிசையிலும், விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் 5வது இடத்திலும் வருகிறார்கள். அதற்குப் பிறகு ஆட்டத்தை முடிக்க நியூசிலாந்து அணியின் கிலென் பிலிப்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பின்னர் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்ஹமதுல்லா ஓமர்சாய் மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்சல் சான்ட்னர் ஆகியோர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் வலு சேர்க்கிறார்கள்.

- Advertisement -

6 இந்திய வீரர்கள்

அதற்குப் பின்னர் பந்துவீச்சு துறையில் நியூசிலாந்து அணியின் மாட் ஹென்றி அதற்குப் பின்னர் இந்தியாவின் முகமது சமி மற்றும் இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மொத்தம் இந்த அணியில் ஆறு இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துரதிஷ்டவசமாக இந்த அணியில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இதையும் படிங்க:கேள்வி கேட்க ஆளே இல்லனா.. கிரிக்கெட் எப்படி மேம்படும்.? அப்புறம் எங்கள மாதிரிதான் இருக்கணும் – பாக் கம்ரான் அக்மல் வருத்தம்

பாசித் அலி தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் டிராபி ப்ளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (சி), ரச்சின் ரவீந்திரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் லியர், கேஎல் ராகுல் (டபிள்யூ கே), கிளென் பிலிப்ஸ், அசம்துல்லா ஓமர்சாய், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, முகமது ஷமி, மற்றும் வருண் சக்ரவர்த்தி.

- Advertisement -