நியூசி ஜெயிக்கும்னு அவங்களே நம்பிருக்க மாட்டாங்க.. ரோஹித் அணிக்கு தப்பு நடந்ததே இங்கதான் – பாக் பாசித் அலி பேட்டி

0
114

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் அதில் ஏற்கனவே இந்திய அணி இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றி

நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்திருந்தது. அந்த சமயத்தில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என்றே இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அதற்கு நேர் மாறாக நியூசிலாந்து அணி தங்களது இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் முதன்முதலாக டெஸ்ட் தொடரை இந்தியாவில் இழந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இந்திய அணி நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாஸித் அலி குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் அதிக நம்பிக்கையே தோல்விக்கு காரணம்

இதுகுறித்து பாசத் அலி விரிவாக கூறும்போது “இரண்டே நாட்களில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்றதும் இலங்கையில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்ததும், நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று இந்திய அணி நினைத்திருக்கலாம். அதாவது இந்திய அணியும் இந்திய அணி நிர்வாகமும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி தனிப்பட்ட முறையில் இந்த தொடருக்காக சிறப்பாக தயாராக இருந்தது என்று தான் கூற வேண்டும்.

இதையும் படிங்க:வரலாற்று டெஸ்ட் தோல்வி.. தீபாவளிக்கும் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ வைத்த செக்.. இதெல்லாம் ஓவர் என ரசிகர்கள் விமர்சனம்

நியூசிலாந்து அணி இழப்பதற்கு எதுவும் இல்லை. நியூசிலாந்து அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏன் நியூசிலாந்து அணி கூட இதைப் பற்றி நினைத்திருக்காது ஆனால் நியூசிலாந்து அணி தங்களது பராமரிப்புகளில் சிறப்பாக இந்த தொடருக்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது” என்று கூறியிருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கிடையே என கடைசி போட்டி, மும்பையில் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -