ஆர்சிபிக்கு சாதகமான இந்த விஷயம்.. அந்த ஒரே ஒரு டீம்னால பிரச்சனையா முடியும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

0
166

18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ராஜத் பட்டிதார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா

17 சீசன்களாக ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த அணிக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு பெங்களூர் அணிக்கு எப்போதுமே மிகப்பெரிய அளவில் கிடைக்கும். விராட் கோலி ஒரு காரணமாக இருந்தாலும் ரசிகர்கள் பெங்களூர் அணி மீது தன்னிச்சையாகவே பெரிய அன்பை கொண்டுள்ளனர்.

இந்த முறை அமைக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி பெங்களூர் அணிக்கு கடைசி நான்கு போட்டியில் மூன்று போட்டி சொந்த மைதானத்திலும், ஆறு போட்டிகளில் நான்கு போட்டி சொந்த மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இது ஆர்சிபி அணிக்கு ஆதரவு அளிக்கக்கூடிய விஷயமாகும் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். அதாவது அடுத்த சுற்றுக்கு பெங்களூர் அணி எளிதாக தகுதி பெறும் வகையில் அட்டவணை அமைந்திருப்பதாக சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு பிரச்சனை

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது “பெங்களூர் அணிக்கு இந்த அட்டவணை தற்போது சுவாரசியமாக அமைந்திருக்கிறது. அவர்கள் கடைசி நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் சொந்த மைதானத்தில் விளையாடியுள்ளனர். இந்த முறை கடைசி ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் விளையாடுகின்றனர். முன்பு இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஆனால் கடந்த சீசன் பெங்களூர் அணி சொந்த மண்ணில் எப்படி விளையாடினார்கள் என்பதை நன்றாக புரிய வைத்தது.

இதையும் படிங்க:பும்ரா வரும் முன்பே.. அணியை தன் தோளில் சுமந்தவர்.. அவர் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு – லட்சுமிபதி பாலாஜி

அவர்கள் சொந்த மண்ணில் கடைசி சில போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். எனவே கடந்த ஆண்டின் டெம்ப்ளேட்டை பார்த்தால் இப்போது அது சரியாக தெரிகிறது. இருப்பினும் அவர்கள் கொல்கத்தா அணிக்கு எதிராக தொடங்கி கொல்கத்தா அணிக்கு எதிராகவே முடிப்பது சுவாரசியமானதாக உள்ளது. அது ஒரு கடினமான ஆட்டமாக இருக்கலாம், ஏனென்றால் போட்டிகள் இறுக்கமாக உள்ளன. மேலும் கொல்கத்தா அவர்களை சொந்த மண்ணில் வென்றுள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -