ஐசிசி தொடர்களில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. அரசியல் காரணங்களால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பல வருடங்களாக நேரடியான போட்டிகளில் விளையாடாமல் இருக்க, இந்தத் தொடருக்கும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் விராட் கோலி கட்டாயம் பாகிஸ்தான் வர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமானார். அது முதலே இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேரடியான போட்டிகளில் மோதிக் கொள்வது அரசியல் காரணங்களால் தடைபட்டது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளில் விராட் கோலி தன்னுடைய பேட்டிங் திறனை நிரூபித்திருக்கிறார்.
அதே சமயத்தில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் பாகிஸ்தானில் மட்டும் விளையாடாமல் இருக்கிறார். பாகிஸ்தானில் விளையாடும் அனுபவம் அவருக்கு கிடைக்காமலேயே இருக்கிறது. விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் அவருடைய வாழ்க்கையில் விடுபட்ட ஒன்று பூர்த்தியாகும் என்றும், அவரை எல்லோரும் விரும்புவார்கள் எனவும் யூனிஸ் கான் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து யூனிஸ் கான் கூறும் பொழுது ” நிச்சயமாக விராட் கோலி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும். நான் இந்தியாவில் கொல்கத்தா மற்றும் மொகாலியில் சதம் அடித்ததை நினைவு வைத்திருக்கிறேன். மேலும் நான் ஆஸ்திரேலியா மெல்போன் மற்றும் இங்கிலாந்து லார்ட்ஸ், சவுத் ஆப்பிரிக்கா வாண்டரஸ் மைதானங்களில் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இருக்கின்றன.
இதே போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து அவருடைய சிறப்பான விளையாட்டை விளையாட வேண்டும். அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பாகிஸ்தான் மட்டுமே விடுபட்டு இருக்கிறது. அதையும் அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.விராட் கோலி இங்கு வந்து விளையாடினால் அது எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.
இதையும் படிங்க : ருதுராஜ் பச்ச குத்தி கிசுகிசுல வந்தாதான் செலக்ட் பண்ணுவிங்களா?.. 7 மேட்ச் என்ன நடந்தது தெரியுமா – பத்ரிநாத் விமர்சனம்
மேலும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி விளையாடிய இன்னிங்சை நான் மிக உயர்வாக மதிப்பிடுகிறேன். ஏனென்றால் அணிக்கு தேவையான பொழுது மிகவும் நெருக்கடியான நேரத்தில் விராட் கோலி கோல் அடித்தார். அவர் பெரிய பேட்ஸ்மேன். அணிக்காக விளையாடக்கூடியவர். அவர் பல சந்தர்ப்பங்களில் முக்கியமான நேரங்களில் தன் பங்களிப்பை அணிக்கு கொடுத்து இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






