ருதுராஜ் பச்ச குத்தி கிசுகிசுல வந்தாதான் செலக்ட் பண்ணுவிங்களா?.. 7 மேட்ச் என்ன நடந்தது தெரியுமா – பத்ரிநாத் விமர்சனம்

0
297
Ruturaj

இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ருதுராஜ் ஒரு அணியில் கூட இடம் பெறவில்லை. இது குறித்து தமிழகம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தேர்வு செய்யப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லை விட ருதுராஜ் எல்லா வகையிலும் சிறப்பான புள்ளி விபரங்களை வைத்திருக்கிறார். மேலும் அவரே ரோகித் சர்மா இடத்திற்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் பெற்று பரிசோதிக்கப்பட்ட வீரராக இருக்கிறார்.

- Advertisement -

ருதுராஜ் தொடர்ந்து இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடி எதிர்காலத்திலும் ரோஹித் சர்மாவின் இடத்தில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைத்து எல்லை கொண்டு வந்தவுடன் அவரை துணை கேப்டனாகவும் மாற்றி இருக்கிறார்கள்.

தற்போது ஜெய்ஸ்வால் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரராக மாறி இருக்கிறார். இன்னொரு பக்கம் கில்லை கொண்டு வந்து துணை கேப்டன் ஆக்கிவிட்ட காரணத்தினால், அவரை மேற்கொண்டு அணியிலிருந்து நீக்குவது மிகவும் கடினம். எனவே இந்திய டி20 அணியில் ருதுராஜுக்கு மொத்தமாக கதவு சாத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் சுப்பிரமணியம் பத்ரிநாத் “ருதுராஜ் மிகச் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறார். அவர் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இந்திய அணிக்காக மேலும் சிஎஸ்கே அணிக்காக என வாய்ப்பு கிடைத்த எல்லா இடங்களிலும் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவரை இலங்கைத் தொடருக்கு ஒரு அணியில் கூட தேர்வு செய்யாததற்கான காரணம் என்னவென்று புரியவே இல்லை. கடைசி 7 போட்டியில் அவருடைய ஆவரேஜ் 71, ஸ்ட்ரைக் ரேட் 158. இதைவிட இந்திய அணிக்கு செலக்ட் ஆக வேறு என்ன செய்யணும்?

இதையும் படிங்க : 29 வருடத்தில் முதல் முறை.. 10வது விக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் வெறித்தனம்.. இங்கிலாந்துக்கு எதிராக 2வது டெஸ்டில் முன்னிலை

இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்றால் உடம்பில் பச்சை குத்தி கொள்வது, நடிகைகளுடன் கிசுகிசுவில் இருப்பது, ஒரு மோசமான பையன் போன்ற இமேஜில் இருப்பதுதான் அளவுகோலாக இருக்கிறதா? என்று தெரியவில்லை. ருதுராஜ் இந்திய அணியில் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு வீரர்” என்று காட்டமாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -