நியூசிலாந்து ஆசிய கண்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்து தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர், இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர், இந்திய அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என மொத்தம் மூன்று தொடர்களில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து நியூசிலாந்து அணி ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் நாடுகளுடன் விளையாடுகிறது.
புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்
நியூசிலாந்து அணியின் பழைய பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் ஜர்கென்சன் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு பொறுப்பிலிருந்து விலகினார். 2023 பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெளிநாட்டு தொடர், 2024 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உள்நாட்டு தொடர், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேக்கப் ஓரம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அடுத்து இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேக்கப் ஓரமை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது. இவர் நியூசிலாந்து அணிக்காக 2001 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் விளையாடியிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் விளையாடியிருக்கிறார்.
எதிர்காலத்திற்கான பணிகள்
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு தூண்களான டிம் சவுதி மற்றும் டிரெண்ட் போல்ட் இருவரும் கூடிய விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நகரக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். எனவே நியூசிலாந்து அணிக்கு அடுத்த ஏழு எட்டு வருடங்களுக்கு உழைக்கக்கூடிய பந்துவீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேக்கப் ஓரமுக்கு இருக்கிறது.
இதையும் படிங்க: ரோகித் ஐபிஎல்-ல் லக்னோ அணிக்கு வருகிறாரா.. 50 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறதா? – எல்எஸ்ஜி ஓனர் பதில்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சமீபத்தில் நான் நியூசிலாந்து அணியுடன் சேர்ந்து பணியாற்றியது, இந்த அணி இன்று செல்ல விரும்புகிறது என்பதைப் பற்றி என் நுண்ணறிவை கொடுத்திருக்கிறது. மேலும் அடுத்தடுத்து வேலையை தொடர நான் ஆர்வமாக இருக்கிறேன்.நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சர்வதேச போட்டி சவால்களுக்கு ஏற்ற வகையில் என் அனுபவத்தால் தயார்படுத்த முடியும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.