பெஸ்ட் ஐடியா தரேன்.. இந்திய அணியை வீழ்த்த .. இத நெனச்சா வீரம் தானா வரும் – பாக் முன்னாள் கேப்டன்

0
1003

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் பல தோல்விகளை சந்தித்து வந்தாலும் முகமது ரிஸ்வான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்று பெரிய நம்பிக்கையை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பெரிய நம்பிக்கையோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும். மேலும் இந்த முறையும் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள தேவையான தகுதிகள் பாகிஸ்தான் அணியிடம் இருப்பதாக முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இந்த முறை இந்திய அணியை எதிர்த்து விளையாடும் போது ஆஸ்திரேலியா மற்றும் வேறு நாட்டிற்கு எதிராக விளையாடுவது போல நினைத்து மிகுந்த தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என்று சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியை வீழ்த்த திட்டம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் போதெல்லாம் அது ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகவும் மற்றும் அதனைச் சுற்றி பரபரப்பும் அழுத்தமும் நிறைந்த சூழலாக இருக்கும். ஆனால் வீரர்களாக நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். முதலில் அந்த சத்தத்தை தடுக்க முயற்சிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலியா அல்லது வேறு எந்த அணிக்கு எதிராக விளையாடுவது போல நினைத்து அதே தீவிரத்தோடு செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க:ஆஸி அணியை வீழ்த்த.. ஸ்மித்தான் அந்த ஐடியா கொடுத்தார்.. அதுக்கு ஐபிஎல்தான் முக்கிய காரணம் – இங்கி ஸ்டோக்ஸ் பேட்டி

தற்போது இந்த தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 2017ஆம் ஆண்டு கேப்டனாக செயல்பட்ட நானும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தான். தற்போது இந்த ஒற்றுமை எங்களிடம் இருக்கிறது. பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள பாகிஸ்தான் அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 2017ஆம் ஆண்டு விளையாடிய சில வீரர்கள் இந்த ஆண்டும் விளையாடுகிறார்கள். எனவே தற்போது அணி மிகவும் வலுவாக உள்ளது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -