ஆஸி அணியை வீழ்த்த.. ஸ்மித்தான் அந்த ஐடியா கொடுத்தார்.. அதுக்கு ஐபிஎல்தான் முக்கிய காரணம் – இங்கி ஸ்டோக்ஸ் பேட்டி

0
387

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த உதவியால் தான் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடிந்தது என்று பரபரப்பான கருத்து ஒன்றை கூறி இருக்கிறார்.

- Advertisement -

சிக்கலில் சிக்கிய இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான ஆல் ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது அந்த அணியில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்குப் பிறகு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இவர்கள் இருவரும் இணைந்து விளையாடி இருக்கிறார்கள்.

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை, பெரிய புகழ்பெறாத ஸ்டோக்ஸ் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி சிக்கலில் இருந்த போது 109 பந்துகளை எதிர் கொண்டு 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 102 ரன்கள் குவித்து தோல்வியின் பாதையில் இருந்த இங்கிலாந்து அணியை வெற்றி பெறும் நிலைக்கு தள்ளினார். இந்த நிலையில் தான் சிறப்பாக விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஐபிஎல் கொடுத்த ஐடியா தான் காரணம் என சில தகவல்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஸ்மித் கொடுத்த ஐடியா

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஸ்மித் ஐபிஎல் தொடரின் போது எனது பேட்டிங் டெக்னிக் குறித்து சில ஆலோசனைகள் கூறினார். அந்த டெக்னிக் எனக்கு பெரிய அளவில் உதவக்கூடும் என நினைத்து கூறினார். நான் பெரிய ஷார்ட்டுக்கு செல்லும்போது எனது பின்பக்கத்தில் பேலன்ஸை இழந்து கொண்டிருந்தேன். அதை அவர் சரிசெய்ய சில டெக்னிக்குகள் கொடுத்தார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒரு முழு அம்சம் என்னவென்றால் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால் நீங்கள் விளையாடும் வாய்ப்பை பெறுவது தான்.

இதையும் படிங்க:ப்ளீஸ் என்னை யாரும் அப்படி சொல்லாதீங்க.. நான் அப்படிப்பட்ட பிளேயர் இல்ல – பாபர் அசாம் வேண்டுகோள்

அந்த சூழ்நிலைகளுக்கு நீங்கள் அதிகமாக ஆளாக நேரிடும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாங்கள் 35 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறினோம். அதனை மனதளவில் கடந்த காலம் குறித்து நினைத்து சிந்திக்கலாம். அந்த சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி இருக்கிறோம் என்று சிறிது நம்பிக்கையை பெறலாம்” என்று பேசி இருக்கிறார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -