இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்றதும் கம்பீர் பயிற்சி முறை மற்றும் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து நிறைய பேச்சுகள் வெளிவருகிறது. இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு முதலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விரும்பவில்லை. அதே சமயத்தில் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் விளையாடக்கூடிய உடல் தகுதியில் இருக்கும் எல்லோரும் விளையாட வேண்டும் என அறிக்கை விட்டார். இதன் காரணமாக இருவரும் விளையாட வந்தார்கள். ஆனால் இந்திய அணி தொடரை தோற்றது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “3ஆட்டங்களில் இலங்கை அணி முழுமையாக 150 ஓவர்கள் விளையாடியது. ஆனால் இந்திய அணி 116 ஓவர்கள் மட்டுமே விளையாடியது. இந்திய அணி நீண்ட பார்மட் கிரிக்கெட்டுக்கு தற்பொழுது தயாராக இல்லை. அவர்கள் டி20 வேகத்தில் விளையாடினார்கள். மேலும் லெப்ட் ரைட் காம்பினேஷன் என்று சொன்னார்கள். இப்பொழுது புதிய பயிற்சியாளர் வந்ததும் அணுகுமுறை மாறிவிட்டது.
விராட் கோலிதான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். என்னை விட அவரை பிடித்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. எனக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் மட்டுமே. ஆனால் சரியான பயிற்சி இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும். கில் அப்படி ஒரு ஷாட் விளையாடினால் இந்தியா தோற்கும். முதலில் ராகுல் வந்தார் பிறகு ரியான் பராக் விளையாட வந்தார். வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். நாம் பயிற்சியாளர் கொடுத்த திட்டத்தை மட்டுமே பார்க்கிறோம். வீரர்கள் செய்யவில்லை என்பதை பார்க்கவில்லை.
உண்மையில் கம்பீர் கொடுத்த திட்டத்தை வீரர்கள் செய்யவில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே கம்பீர் பயிற்சி மோசமாக இருந்தது என்று கூற முடியாது. இது அவருடைய முதல் தொடர். அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக உள்நாட்டில் அவருக்கு இருக்கும் தொடர் சுலபமானதாக இருக்கும்.
இதையும் படிங்க : இங்கிலாந்து கோச் பதவி வேணாம்.. ஐபிஎல்தான் எனக்கு வேணும் காரணம் இருக்கு – ரிக்கி பாண்டிங் பேட்டி
அதே சமயத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒரு முடிவு வரும். நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒன்று கம்பீர் அணியில் தொடர்வாரா இல்லையா என்று தெரியும். இல்லையென்றால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடர்வார்களா இல்லையா என்பது தெரியவரும்” என்று கூறியிருக்கிறார்.