உங்களை நாங்க மதிக்கிறோம்.. ஆனா வார்த்தையை கவனமா பயன்படுத்துங்க.. சுனில் கவாஸ்கருக்கு பாக் முன்னாள் கேப்டன் கண்டனம்

0
84

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் துபாயில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் சுனில் கவாஸ்கரின் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அதற்குப் பின்னர் இந்திய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் வங்கதேச அணிக்கு எதிரான கடைசி போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் ரத்தானது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் மோசமான ஆட்டத்தை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், விமர்சித்துப் பேசியிருந்தார். அதாவது பாகிஸ்தான் சர்வதேச அணியை, இந்தியாவின் முதல் தர அணியான பி டீம் அல்லது சி டீம் கூட விளையாடி வெற்றி பெறும் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து பல பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடையே கோபத்தை உண்டாக்கியது. சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சுனில் கவாஸ்கர் தனது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு கூறுகிறார்.

- Advertisement -

வார்த்தையில் கவனம் தேவை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” சுனில் கவாஸ்கர் முதலில் புள்ளி விவரங்களை சரியாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு மூத்த கிரிக்கெட் வீரர், அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் ஒருவரின் நாட்டைப் பற்றி பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். உங்கள் அணி நன்றாக விளையாடியுள்ளது, உங்கள் அணியை பாராட்ட உங்களுக்கு உரிமை உண்டு.

இதையும் படிங்க:நாட்டுக்காக உயிரை கொடுத்து ஆடுறோம்.. இது போன்ற விமர்சனங்களை கண்டுக்காதீங்க.. சமிக்கு இந்திய முன்னாள் வீரர் அறிவுரை

ஆனால் இதுபோன்று மற்ற அணி குறித்து பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். இதை நான் அவருக்கு சற்று கடுமையான தொனியில் சொல்கிறேன்” என தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். பாகிஸ்தான் அணி தொடரை நடத்தி முதல் அணியாக வெளியேறி இருக்கும் நிலையில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு நான்கு போட்டிகளிலும் வெற்றி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -