நாட்டுக்காக உயிரை கொடுத்து ஆடுறோம்.. இது போன்ற விமர்சனங்களை கண்டுக்காதீங்க.. சமிக்கு இந்திய முன்னாள் வீரர் அறிவுரை

0
64

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய பவுலர் முகமது சமி எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சையது கிருபாணி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரை இறுதிப் போட்டியின் போது சமி, ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி உண்ணாவிரதம் கடைபிடிக்காமல் குளிர்பானம் அருந்தினார் என்று சர்ச்சை வெளியானது. இதற்கு பல முன்னாள் இந்திய வீரர்கள் முகமது சமிக்கு ஆதரவளித்தார்கள். ஐசிசி தொடரை பொருத்தவரை சமி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை நடைபெற்ற நான்கு லீக் ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமி, இன்று நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு மிக முக்கியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சையது கிர்வானி, இது போன்ற விமர்சனங்களை ஒரு காதல் வாங்கி விட்டு மறு காதல் விடுமாறும், இதில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று சில விஷயங்களை அவருக்கு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சையது கிர்வானி கூறும் போது ” அவர்கள் அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள். ரம்ஜான் பண்டிகை என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இது போன்ற நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. நாட்டின் கொடியை உயர்த்துவதற்காக, நாங்கள் நாட்டிற்காக உயிரையே கொடுத்து விடுகிறோம். மக்கள் என்ன சொன்னாலும் அதை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். சூழ்நிலையை பொறுத்து ஒவ்வொருவர் மீதும் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது.

இதையும் படிங்க:மகளிர் ஐபிஎல்: 4,6,6,4,4,6.. கடைசி வரை போராடிய சினே ராணா.. தொடரை விட்டு வெளியேறிய நடப்பு சாம்பியன் ஆர்சிபி

எனவே இந்த விஷயத்தை பொருத்தவரை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அதை அப்படியே முற்றிலும் ஒதுக்கி வைத்து விடுங்கள். ஒரு காதில் இதுபோன்ற விஷயங்களை கேட்டுக் கொண்டே இருங்கள், ஆனால் அதை மறு காதில் வெளியே விட்டு விடுங்கள். நீங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டால் அதிக அழுத்தத்தில் இருப்பீர்கள். என்ன சொல்லப்பட்டாலும், என்ன எழுதப்பட்டாலும் நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் உங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நாட்டிற்காக விளையாட வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -