இங்கிலாந்து கோச் பதவி வேணாம்.. ஐபிஎல்தான் எனக்கு வேணும் காரணம் இருக்கு – ரிக்கி பாண்டிங் பேட்டி

0
2116

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து பதவி விலகியதை தொடர்ந்து, அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தலைமை பயிற்சியாளராக இருக்க அழைப்பு விடுத்த போதிலும் அதனை பாண்டிங் மறுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளர் பதவியை நிராகரித்ததற்கான காரணம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாக விளங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஆறு வருடங்களாக பயிற்சியாளராக திகழ்ந்துள்ளார். இருப்பினும் டெல்லி அணியால் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் இந்திய பயிற்சியாளர் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க விரும்பி பாண்டிங்கை பதவி விலக்கியது.

இந்த சூழ்நிலையில் ரிக்கி பாண்டிங் பதவி விலகியதை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக திகழ்ந்த மேத்யூ மோட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்று வீரரை தேடும் விதமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரிக்கி பாண்டிங்கை அனுகியது. ஆனால் ரிக்கி பாண்டிங் சர்வதேச அணிக்காக முழு நேர பயிற்சியாளராக ஈடுபட்டால் அதிக நேரத்தை செலவிட வேண்டி வரும் என்பதால் தனது குடும்பத்தை கருத்தில் கொண்டு அதில் இருந்து விலகி இருக்கிறார்.

இது குறித்து பாண்டிங் விரிவாக கூறும்போது “சர்வதேச அணிக்காக பயிற்சியாளராக இருப்பது குறித்து இப்போது சிந்திக்க மாட்டேன். மற்றதை விட ஒரு சர்வதேச அணிக்கு பயிற்சியாளராக இருப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதால் எனது வாழ்க்கை இருக்கும் நிலையில் அதற்கான இடம் தற்போது இல்லை என்பதை நான் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.

- Advertisement -

வர்ணனையாளராக எனது தொலைக்காட்சி வேலைகள், நான் அவ்வப்போது செய்யக்கூடிய காரியங்கள் மற்றும் எனக்கு வேறு சில கடமைகளும் கிடைத்துள்ளன. எனவே இந்த நேரத்தை கடந்த இரண்டு வருடங்களாக எனது வீட்டுடன் செலவிட முடியாத நேரத்தோடு நான் இதன் மூலம் சமன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். அதனால் தற்போது சர்வதேச அணிக்கு பயிற்சியாளராகும் எண்ணம் இல்லை.

இதையும் படிங்க:விராட் ரோகித்துக்கு இனி கஷ்ட காலம்.. கம்பீர் இந்த விஷயத்துல 2 பேரையும் விட மாட்டார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியது குறித்து கேட்கிறீர்கள். நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்து, முன்னேற முடிவு செய்தோம். அதற்காக நான் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட மாட்டேன் என்று அர்த்தம் அல்ல. திரும்பவும் ஐபிஎல் தொடரில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறேன். அடுத்து சில வாய்ப்புகள் வரக்கூடும். எனவே அடுத்த சில வாரங்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியிருக்கிறார்.