நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே தோல்வி குறித்து இந்திய முன்னாள் ஜபவான்கள் ஷேவாக் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்கள்.
10வது இடத்தில் சிஎஸ்கே
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் டெவால்டு ப்ரெவிஸ் சிறப்பாக விளையாடிய 42 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சன் ரைசர்ஸ் அணி தொடக்கம் தடுமாற்றமாக அமைந்தாலும் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் பொறுப்பை உணர்ந்து சூழ்நிலையை நன்றாக அறிந்து சிறப்பாக விளையாடினார்கள். இதன் மூலமாக சென்ற தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில் சென்னை அணி இரண்டு வெற்றிகளோடு கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து முன்னாள் ஜாம்பவான்கள் சேவாக் மற்றும் சுனில் கவாஸ்கர் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்கள்.
இது நல்ல விஷயம் தான்
இதுகுறித்து சேவாக் கூறும்போது “சிஎஸ்கே 10வது இடத்தை பிடிக்குமா இல்லையா? என்பதை என்னால் ஒரு தெளிவாக சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் வெற்றி பெற ஆரம்பித்தால் அதுவும் இனிமையான விஷயம் தான். ஏனென்றால் அப்போதுதான் அட்டவணையின் கடைசியில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணர்வார்கள். இவ்வளவு காலம் கழித்து பல இறுதிப் போட்டிகளில் விளையாடிய பிறகும் அவர்கள் இதை அனுபவித்ததில்லை” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:1 அல்லது 2 இடத்துல ஓட்டை இருந்தா அடைக்கலாம்.. ஆனா அணியே ஓட்டையா இருந்தா என்ன செய்வது.? தோல்வி குறித்து எம்.எஸ். தோனி
இது குறித்து கவாஸ்கர் கூறும்போது “சென்னை அணி 10வது இடத்தைப் பிடித்தால் அது ஒரு சிஸ்டம் ஷாக் ஆக இருக்கும். அந்த ஷாக் அவர்களை அடுத்த வருடம் சிறப்பாக செயல்பட வைக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை 7வது அல்லது 8வது இடத்தை பிடித்ததை விட 10வது இடத்தை பிடித்தது சிறப்பு என்று நினைக்கிறேன். ஏனென்றால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தால் தான் அடுத்த வருடம் பெரிய மாற்றத்தை செய்ய வேண்டும் என்கிற உணர்வு நிச்சயமாக வரும்” என்று கவாஸ்கர் பேசி இருக்கிறார்.






