இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் வங்கதேச அணியின் பேட்டிங் குறித்து விமர்சித்து பேசியிருக்கிறார்.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்ற நிலையில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. சற்று அழுத்தத்தில் இரண்டு டெஸ்ட் போட்டியை வங்கதேச அணி எதிர்கொண்ட நிலையில் 107 ரண்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தடைபட்டது.
இரண்டு நாட்கள் மட்டும் மீதம் இருப்பதால் இந்த போட்டி கிட்டத்தட்ட டிராவை நோக்கி செல்லும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிஅற்புதமாக செயல்பட்டு இரண்டாம் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் முழுமையாக கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வங்கதேச அணியின் பேட்டிங் குறித்து வர்ணனையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காட்டமான பதிலை அளித்திருக்கிறார்.
வர்ணனையாளர் அதர் அலி வங்கதேச அணியின் பேட்டிங் குறித்து கவாஸ்கரிடம் “சன்னி ஜி, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்? என்று அதர் அலி கேட்டிருந்தார். அதற்கு பதில் தெரிவித்த சுனில் கவாஸ்கர் “ஒரு இந்தியனாக நான் அவர்களை வெளியே சென்று விடுங்கள் என்று கூறுவேன். ஒருவேளை அவர்கள் இதை டெஸ்ட் போட்டி என்பதை மறந்து விட்டார்களோ என்று எனக்கு தோன்றுகிறது.
அதுவும் கடைசி நாளில் வங்கதேச வீரர் சாண்டோ விளையாடிய ஷாட்களை நாம் பார்க்கும் போது அது புத்திசாலித்தனமாக இல்லாமல் இருந்தது. அவர்கள் என்ன செய்ய முயற்சித்தார்கள் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய டெஸ்ட் தொடர்.. கேப்டன் பொறுப்பில் டிம் சவுதி விலகல்.. புதிய கேப்டன் அறிவிப்பு – காரணம் என்ன?
வங்கதேச அணி கடைசி இரண்டு நாட்களில் மட்டும் 17 விக்கெட்டுகளை இழந்ததோடு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை மோசமான நிலையில் தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் மோசமாக தோற்று இருக்கிறது.