இந்திய மற்றும் தமிழக முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் அதிரடி இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் தனக்கு சிறந்த பேட்டிங் பார்ட்னராக இல்லை எனவும் அதற்கான காரணம் என்னவென்று கூறியிருக்கிறார்.
உலக கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ரிச்சர்ட்ஸ்க்கு அடுத்து முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாட கூடியவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். மேலும் அவர் 99 ரன்னில் இருந்தாலும் 199 ரன்னில் இருந்தாலும் சிக்ஸர் அடிப்பதற்கான பந்தாக இருந்தால் அடிப்பார். அவருக்கு ஆட்டத்தில் சூழ்நிலை பற்றி எப்பொழுதும் கவலை இருந்தது கிடையாது.
சேவாக் எனக்கு நல்ல பேட்டிங் பார்ட்னர் கிடையாது
இப்படி தனி ஒரு வீரராக ஆட்டத்தை மாற்றும் வல்லமை படைத்திருந்த அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனக்கு ஒரு நல்ல பேட்டிங் பார்ட்னராக இருந்தது கிடையாது என இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார். மேலும் அதற்கான சுவாரசியமான காரணத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “சேவாக் பொதுவாக பேட்டிங் செய்வதற்கு சிறந்த பார்ட்னர். ஆனால் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் அதற்கு நேர் எதிரான ஒன்றாக இருந்தது. நான் எப்பொழுதும் கொஞ்சம் பதட்டமாகவே இருப்பேன். என்னிடமிருந்து நான் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் சேவாக் முற்றிலும் நிதானமாக இருக்கக்கூடியவர். ஏறக்குறைய அவர் எதுவுமே தொந்தரவு செய்யாதது போல இருப்பார்”
ஏனென்றால் காரணம் இதுதான்
மேலும் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “அவர் எதையும் கவலைப்படாதது போல் பேட்டிங் செய்கிறார். அவர் தாக்கி விளையாடுவதற்கான நிறைய இன்டெண்ட் காட்டுவார். ஆனாலும் அதற்கு ஒரு லிமிட் வைத்திருக்கிறார். அவருக்கு அந்த சிறந்த சமநிலையை கையாளும் திறன் இருக்கிறது. இது ஒரு விளையாட்டு வீரருக்கு முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க: 17 பந்து.. 5 விக்கெட்.. ஆஸி மேத்தியூ ஷார்ட் மேஜிக் பவுலிங்.. லிவிங்ஸ்டன் அதிரடியால் இங்கிலாந்து அணி வெற்றி.. 2வது டி20
நான் அவருடன் பேட்டிங் செய்ய விரும்பினேன் என்பது உண்மை. ஆனால் அவர் எனக்கு ஒரு நல்ல பேட்டிங் பார்ட்னர் ஆக இருந்தது கிடையாது. ஏனென்றால் நான் 20 ரன்கள் எடுத்திருக்கும் பொழுது அவர் 120 ரன்கள் எடுத்திருப்பார். அல்லது அவர் அரைசாதம் அடித்திருக்கும் பொழுது நான் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பி இருப்பேன். அவர் தன்னுடைய உலகத்தில் வித்தியாசமான வேகத்தில் விளையாடக் கூடியவர்” என்று கூறியிருக்கிறார்.