இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது போட்டி வருகிற 24-ஆம் தேதி புனேவில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சுழல் பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக காணப்படும் இந்திய ஆடுகளங்களில் கடந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் என மூன்று பேரும் சேர்த்து மூன்று விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார்கள்.
கடந்த டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாத காரணத்தால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன ஜடேஜா மற்றும் பும்ராவை வைத்தே இந்திய அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய அணியின் மீது அழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் இந்திய அணி மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம் என்று முன்னாள் வீர சஞ்சய் மஞ்சு ரேக்கர் கூறியிருக்கிறார்.
தாக்கத்தை ஏற்படுத்தாதது தெரிய மாற்றங்களில் ஒன்று
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இப்போது இந்திய அணியின் மீது அழுத்தம் அதிகமாக உள்ளது. இந்திய ஆடுகளங்களில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருவரும் தாக்கத்தை ஏற்படுத்தாதது பெரிய மாற்றங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப்படும் நிலையில் அது வழங்கப்படும். வேகப்பந்துவீச்சாளர்களாலும் இந்திய அணி வெல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:அப்ப தார் ரோடு பிட்ச் போட்டது நான் கிடையாது.. பாபர் அசாம்தான் எல்லாத்துக்கும் காரணம் – ரமீஷ் ராஜா ஒப்புதல்
ஆனால் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த சூழ்நிலைகளை இந்திய பந்துவீச்சாளர்களை விட நன்றாகவோ அல்லது சிறப்பாகவோ பயன்படுத்துவார்கள்” என்று கூறியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயம். எனவே இந்திய அணி தேவையான மாற்றங்களை செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 24-ஆம் தேதியும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.






