சுந்தர பாராட்டினது போதும்.. அவர் மட்டும் இதை செய்யலனா இந்திய அணி கண்டிப்பா சிக்கலில் மாட்டிருக்கும் – பார்த்தீவ் பட்டேல் பேட்டி

0
139

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் குறித்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது. அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கி தொடர்ந்து விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் நியூசிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்த வீரர் ஒருவரை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்து

முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுககும் வகையில் புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது. இந்தப் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 23.1 ஓவரில் 59 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தற்போது அவரை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் பேட்டிங்கில் நல்ல நிலையில் வலுவாக திகழ்ந்த நியூசிலாந்து அணிக்கு ஆடுகளம் பெரிதாக கை கொடுக்காத போதிலும் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது ரவிச்சந்திரன் அஸ்வின் தான் என்று இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் பாராட்டி பேசியிருக்கிறார். இந்திய அணிக்கு ஒரு மூத்த வீரராக தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்துகிறார் என்றும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

திறமையை நம்பி மட்டுமே பந்து வீசி இருக்கிறார்

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணி சிக்கலில் இருந்து மீண்டு வரும்போதெல்லாம் பாதையை காட்டுவதற்கு ஒரு மூத்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்கிறார். இங்கேயும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடிய போது ஒரு மூத்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் வழிகாட்டினார். அஸ்வின் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு தான் வாஷிங்டன் சுந்தர் அடுத்த ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க:இந்தியா ஜெயிச்ச தொடர்கள்ல.. எனக்கு அதிக வருத்தத்தை கொடுத்தது இந்த போட்டிதான் – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

தொடக்கத்தில் அஸ்வின் பந்து வீச வந்தபோது ஆடுகளத்தில் அந்த அளவிற்கு தேய்மானம் இல்லை. ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு போதிய அளவில் கை கொடுக்கவில்லை. அப்போது அஸ்வின் தனது திறமையை நம்பி மட்டுமே முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்” என்று அஸ்வினை பாராட்டி பார்த்து பட்டேல் பேசியிருக்கிறார்.

- Advertisement -