இந்திய அணி ஜெயிச்ச தொடர்கள்ல.. எனக்கு அதிக வருத்தத்தை கொடுத்தது இந்த போட்டிதான் – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

0
424

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதற்கு பயிற்சி பெறும் விதமாக இந்திய வீரர்கள் அனைவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டனான பேட் கம்மின்ஸ் வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரை வைத்திருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே இரண்டு முறை அவர்களை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தது. உலக சாம்பியன் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு இது பெரிய அவமானமாக கருதப்படும் நிலையில் இந்த முறை அதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று மிகத் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்த முறை இந்திய அணியிடம் தோல்வி அடைவதற்கு எந்தக் காரணமும் இருக்கப் போவதில்லை என்றும் 2021ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய போது அந்தத் தொடர் தனக்கு மிகவும் வலித்ததாகவும் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தத் தொடர் எனக்கு மிகவும் வலித்தது

இது குறித்து கம்மின்ஸ் விரிவாக கூறும்போது “2018-19ம் ஆண்டு நடைபெற்ற தொடருக்கு முன்னதாக நாங்கள் முற்றிலுமாக தோல்வி அடைந்தோம். 2020 மற்றும் 21 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி மிகவும் இறுக்கமாக போராடியது. இருப்பினும் அவர்கள் கபாவில் பெற்ற வெற்றி மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த தருணம் எரிச்சல் ஊட்டும் வகையில் இருந்தது. ஆனால் அந்த இடத்தில் முற்றிலும் நாங்கள் ஆட்டம் இழந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன். அந்தத் தொடர் தனக்கு அதிக அளவில் வலித்தது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:WTC பைனல்.. இந்திய அணிக்கு பிரச்சனையே தென் ஆப்பிரிக்காதான்.. நியூஸி இல்லை – முழு அலசல்

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் தற்போது உள்நாட்டு ஷெப்பீல்டு உள்நாட்டு தொடரில் விளையாடி வருகின்றனர். எனவே இந்த முறை நிச்சயம் இந்தியாவிடம் இருந்து கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மிகத் தீவரம் காட்டி வருகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இந்திய அணியும் அதற்கு சளைத்ததில்லை என்பதால் இந்தத் தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -