பிசிசிஐ உத்தரவு.. இங்க பிரச்சனை விராட் ரோகித்தது தான்.. மத்த பசங்க கிளம்பிட்டாங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
46
Aakash

தற்போது இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் சிறப்பானது என ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகளில் அனைத்து இந்திய வீரர்களும் இந்திய அணிக்கு விளையாடாத காலகட்டத்திலும், காயம் இல்லாத சூழ்நிலையிலும் கட்டாயம் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எந்த காரணமும் சொல்லக்கூடாது

இது குறித்து ஆகாஷ் டு சூப்பரா பேசும் பொழுது ” இந்த விதியில் நீங்கள் கிடைப்பதாக இருந்தால் என்று சுட்டிக் காட்டப்படுகிறது, அதாவது நீங்கள் இந்திய அணிக்கு விளையாடாமல் இருந்தாலும், மேலும் நீங்கள் காயம் அடையாமல் இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தெளிவாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் உங்களுடைய பணிச்சுமையை பிசிசிஐ மற்றும் என்சிஏ நிர்வகிக்கும் என்றும் கூறப்படவில்லை. எனவே நீங்கள் விளையாடாமல் இருப்பதற்கு எந்த காரணத்தையும் கூற முடியாது”

“இந்த அறிவிப்பு நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இது ஏற்கனவே இருந்த ஒன்றுதான். ஆனால் பின்பு இது கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கி விட்டது. பிறகு மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டது. தற்போது கட்டாயமாக எல்லோரும் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது”

- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதில் நன்மை

“நீங்கள் உங்கள் சொந்த பார்மை மீட்டுக் கொள்வது உடன், நீங்கள் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டுக்கும் அதன் தீவிரத் தன்மைக்கும் பெரிய பங்களிப்பை கொடுக்க முடியும். இதனால் இந்த நன்மைகள் எல்லாம் உண்டாகிறது. தற்பொழுது ரிஷப் பண்ட் டெல்லிக்கு கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்று விளையாட தயாராகிவிட்டார். மேலும் கில் பஞ்சாப் அணிக்கு விளையாட இருக்கிறார்”

இதையும் படிங்க : ஒரு காரணம் போதும் சாம்சனை செலக்ட் பண்ண.. ரிஷப் பண்ட் சிலருடன் சேரக்கூடாது – முகமது கைஃப் விருப்பம்

“தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பற்றி தான் எந்தவித தகவலும் இல்லாமல் இருந்து வருகிறது. இதில் ரோஹித் சர்மா மும்பை அணியின் பயிற்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அதே சமயத்தில் விராட் கோலிக்கு கழுத்தில் சுளுக்கு என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடாவிட்டாலும் டெல்லி அணியுடன் இணைந்து ராஜ்கோட்டில் இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -