நேத்து சூர்யா பண்ணுன அந்த ஒரு சம்பவம்.. ரிச்சர்ட்ஸை கண்ணு முன்னாடி கொண்டு வந்துச்சு.. நவ்ஜோத் சிங் புகழாரம்

0
246

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சூரியகுமார் யாதவ் தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவர் அடித்த ஒரு ஸ்வீப் ஷாட் தனக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸை நினைவு படுத்தியதாக நவ்ஜோத் சிங் சித்து கூறி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் தடுமாறி விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேற, ஆடுகளமும் அதற்கு தகுந்தவாறு மெதுவாகவே இருந்தது. ஆனால் சூர்யாவிற்கு மட்டும் ஆடுகளம் பேட்டிங்கிற்க்கு சாதகமாக இருந்தது போல் தெரிகிறது.

இந்தியாவில் பேட்டிங் ஆடுகளத்தில் எப்படி விளையாடுவாரோ அதே போன்று நேற்று பந்துவீச்சுக்கு சாதகமான வெஸ்ட் இண்டீஸ் மைதானத்திலும் விளையாடினார். குறிப்பாக அவருக்கே உரித்தான ஸ்வீப் ஷாட்டுகள் மூலம், எதிரணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்துக் கொண்டிருந்தார். சுழற் பந்து வீச்சு, வேகம் என எதுவாக இருந்தாலும் பந்து தனது எல்லையில் இருந்தால் அதனை தண்டிக்காமல் விடவில்லை. அவர் அடித்த 28 பந்துகளில் 53 ரன்கள் இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவியது.

- Advertisement -

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 134 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த சூரியகுமார் யாதவை தற்போது பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங், அஹ்மதுல்லா ஓமர்சாயின் பந்துவீச்சில் அவர் அடித்த ஸ்வீப் ஷாட், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ஸை நினைவுபடுத்துவதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து நவ்ஜோத் சிங் விரிவாக கூறும் பொழுது ” சூரியகுமார் யாதவ் அவர் நின்ற பேட்டிங் பொசிஷனிலேயே நின்றிருந்தால், அது ஒரு வைட் பந்தாக அமைந்திருக்கும். ஆனால் ஆப் சைடில் வீசிய லோ புல்டாஸ் டெலிவரியை ஆன்சைடில் பவுண்டரி அடித்த விதம், எனக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை நினைவு படுத்தியது. அப்படி ஒரு அற்புதமான ஷாட் அது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:சூரியகுமார் பேட்டிங்கை விமர்சித்த மஞ்ச்ரேக்கர்.. உடனே பதிலடி தந்த அனில் கும்ப்ளே.. சுவாரசிய நிகழ்வு

ஆட்டத்தின் 13 வது ஓவரை வீசிய ஓமர் சாய் அவரின் இரண்டாவது பந்தில் ஆப் ஸ்டம்பிற்கு வெளியே லோ புல்டாசாக வீசிய பந்தை, சிறப்பாக சூரியகுமார் யாதவ் அதனை எதிர்கொண்டு ஆன்சைடில் ஒரு பௌண்டரியை விளாசுவார். அந்த பௌண்டரியைத்தான் தற்போது நவ்ஜோத் சிங் நினைவு கூர்ந்து இருக்கிறார்.

- Advertisement -