15,921 ரன்.. 6 வருஷம்.. சச்சினின் குறிப்பிட்ட சாதனையை இப்படி ஜோ ரூட் முறியடிப்பார் -தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

0
307
Sachin

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவங்களில் பல பேட்ஸ்மேன்களுக்கும் கனவாக இருக்கின்ற மகத்தான சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் உடைக்க முடியும் என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் அதிக டெஸ்ட் சதங்கள் மற்றும் அதிக ரன்கள் என பெரிய சாதனைகளை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் படைத்திருக்கிறார். இந்தச் சாதனைகளை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எந்த பேட்ஸ்மேனும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வர முடியாது. அந்த அளவிற்கு கடினமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 200 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறார். சராசரியாக சிறந்த டெஸ்ட் வீரர்கள் கூட 150 முதல் 170 டெஸ்ட்கள் விளையாடுவதற்குதான் வாய்ப்புகள் உண்டு. மேலும் மாறிவரும் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச டெஸ்ட் போட்டிகள் இனி நடப்பதும் கடினம். மேலும் அவர் மொத்தமாக 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் 51 சதங்கள் அடித்து இருக்கிறார்.

தற்பொழுது 33 வயதான ஜோ ரூட் 143 டெஸ்ட் போட்டிகளில் 11,942 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 சதங்கள் அடித்து இருக்கிறார். அவர் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை முறியடிப்பதற்கு மேற்கொண்டு 4000 ரன்கள் எடுக்க வேண்டும். அதிக சதங்கள் சாதனையை முறியடிக்க 19 சதங்கள் எடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள அதிக ரன்கள் தாண்டுவதற்கு ஜோ ரூட்டுக்கு கிட்டத்தட்ட நான்காயிரம் ரன்கள் வேண்டும். இத்தோடு அவர் தற்பொழுது 143 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறார். சச்சின் 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறார். இந்த வகையில் அவர் 57 டெஸ்ட் போட்டிகள் பின்னால் இருக்கிறார். மொத்தமாக அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆறு வருடங்கள் ஆவது தேவைப்படும். அந்த ஆறு வருடங்களில் அவர் நான்காயிரம் ரன்கள் எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : இங்க பாருங்க கம்பீர் வெறும் கோச்தான்.. உலக கோப்பையை அவர் ஜெயிக்க போறது இல்ல – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து

இது சாத்தியமா? என்று கேட்டால், ஜோ ரூட் ஒரு அற்புதமான வீரர். இதற்கு சில விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். அதற்கு முதலில் அடுத்த ஆறு வருடங்கள் அவர் ஃபிட்டாக இருக்க வேண்டும். அப்பொழுது அவருக்கு வயது 39 ஆகும். இந்த நிலையில் இது அவரால் முடியுமா? என்றால், கணிதத்தின் அடிப்படையில் சாத்தியம். எனவே எல்லாம் சரியாக அமைந்தால் அவரால் சச்சினின் அதிக ரன்கள் மற்றும் அதிக போட்டிகள் சாதனையை முறியடிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -