ஐபிஎல் மும்பை அணியில் ரோகித் சர்மா இருக்க மாட்டார்.. இனி எல்லாமே அந்த வீரர்தான் – இந்திய முன்னாள் வீரர் திட்டவட்டம்

0
183
Rohit

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா நீடிப்பாரா? என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா நீடிக்க மாட்டார் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உறுதியாக கூறியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக கொண்டு வந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நிறைய குழப்பங்களை அணிக்குள் ஏற்படுத்தி விட்டது. தற்பொழுது இந்த குழப்பங்களை எப்படி தீர்ப்பது என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு சரியான விடை கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா சூரியகுமார் வைத்த டிவிஸ்ட்

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை எதிர்காலமாக கருதி கேப்டன் ஆக்கியது. இப்படியான நிலையில் ஒரு பக்கம் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையை வென்று பெரிய கவனத்தை ஈர்த்து விட்டார். உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்கின்ற பெரிய அடையாளம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் அவர் உடனுக்குடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அவருடைய இடத்திற்கு வரவேண்டிய ஹர்திக் பாண்டியாவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை. இதன் காரணமாக இன்னொரு மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவை புதிய இந்திய டி20 அணியின் கேப்டனாக மாற்றி விட்டார்கள். தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கான வெளிச்சம் மிகவும் குறைந்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் போட்ட கணக்குகள் பொய்யாகிவிட்டது.

- Advertisement -

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிக்க மாட்டார்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பாரா அல்லது போவாரா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தங்க மாட்டார் என்று நினைக்கிறேன். அவர்கள் யார் தக்க வைப்பார்கள் என்பதும் பிரச்சனை.

அதே சமயத்தில் இந்த விஷயத்தில் மகேந்திர சிங் தோனியின் கதை மிகவும் வித்தியாசமானது. அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இருக்கும் விஷயங்கள் வேறு மாதிரியானவை. துரதிஷ்டவசமாக இந்த இடத்தில் ரோகித் சர்மா மகேந்திர சிங் தோனி கிடையாது. ரோகித் சர்மா நினைத்தால் இருக்கலாம் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியே விட்டுவிடலாம்.

இதையும் படிங்க : ஜோ ரூட் நீங்க எங்க ஆள்.. ஆனா பும்ராகிட்ட என்ன பண்ண முடிஞ்சது?.. ரெடியா இருங்க வராரு – மைக்கேல் வாகன் பேச்சு

மேலும் ரோகித் சர்மா டிரேடிங் மூலம் இன்னொரு அணிக்கு அனுப்பப்படலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை இது நடக்கவில்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா பயணம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன். ஆனால் சூரியகுமார் யாதவை டிரேடிங் செய்ய மாட்டார்கள் அவரும் வெளியே செல்ல விரும்ப மாட்டார். அவர் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய வீரராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -